நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 ஜூலை, 2015

அரவணைப்பு அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா




கொங்குமண்டலத்தில் பிறந்து, தம் கடும் உழைப்பாலும் அறிவாற்றலாலும் முன்னேறி, குவைத்து நாட்டில் பணிபுரிபவர் பொறியாளர் கு.இளங்கோவன் ஆவார். இவர் தம் உழைப்பில் ஈட்டிய பொருளைப் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விநலனுக்கு உதவும் வகையில் அரவணைப்பு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி ,ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கிவருகின்றார். இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் இந்த நிதியுதவியால் பயன்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் புதுவையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அரவணைப்பு அறக்கட்டளை இரண்டாவது ஆண்டாக நிதியுதவி வழங்குகின்றது. அதற்கான விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டவண்ணம் நடைபெற உள்ளது. மேலும் அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற முனைவர் . எழில்வசந்தன் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்படவுள்ளார். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்: 19.07.2015, (ஞாயிறு) நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம்: சற்குரு உணவகம்,என்.டி.மகால் அருகில், புதுச்சேரி

 நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
இறை வாழ்த்துப் பாடல்கள்
தலைமை: 
மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள்
பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்
 மாண்புமிகு தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு

சிறப்புரை: 
எழுத்துச்செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்கள், சென்னை

முன்னிலை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்
 திரு. அரங்க. மாரிமுத்து அவர்கள்

அறிமுகவுரை: 
பொறியாளர் கு.இளங்கோவன் அவர்கள், அரவணைப்பு அறநிலை

வரவேற்புரை: 
திரு. சுந்தர முருகன் அவர்கள், சாகித்திய அகாதெமி, உறுப்பினர்

நோக்கவுரை: 
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

ஏற்புரை:. 
முனைவர் ஏ. எழில்வசந்தன் அவர்கள்

நன்றியுரை: 
திரு. செ. திருவாசகம் அவர்கள்



கருத்துகள் இல்லை: