நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 14 ஜூலை, 2015

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி பரிசு 3000.00 உருவா!


  புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் என்னும் இலக்கிய அமைப்பு பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்துவருகின்றது. அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை இந்த அமைப்பு அறிவித்துள்ளது. படைப்பார்வம் உடையவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லலாம்.

போட்டி நெறிமுறைகள்:

 1. 4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக் கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப் பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.

2. கதையின் இரண்டு படிகளை அனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ந்தப் பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.

3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா

4.தேர்தெடுக்கப்பட்ட கதைகள் வெல்லும்தூயதமிழ்மாதஇதழில்வெளியிடப்படும்.

5. நடுவர் தீர்ப்பே இறுதியானது .

6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்

  • பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டு முதற்பரிசுகள் 750.00=1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டு மூன்றாம்பரிசுகள் 250.00= 500

  • கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015


முகவரி : 

முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009
        
தொ:0413-2247072,  செல்பேசி 9791629979

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

அறிவிப்புக்கு நன்றி.