நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 ஜூன், 2015

உடையார்பாளையம் ஜமீன் குடும்பம் சார்ந்த திரு. பெ. கு. நந்தகுமார் மறைவு!
  உடையார்பாளையம் ஜமீன்தார் திரு பெரிய குழந்தை ராஜா அவர்களின் இளைய மகனும், என் அருமை நண்பர்கள் திரு. சதீஷ்குமார், திரு. பரணிதர சிவக்குமார் ஆகியோரின் உடன் பிறந்தவருமாகிய திரு. பெ. கு. நந்தகுமார் அவர்கள் உடையார்பாளையத்தில் 07. 06. 2015 பகல் 2 மணிளவில் இயற்கை எய்தினார். அன்னாரை இழந்து வருந்தும் உடையார்பாளையம் ஜமீனைச் சேர்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், உடல் நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ளவுமாக உடையார்பாளையம் அரண்மனைக்குச் சென்றிருந்தேன். 

  உடையார்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த பெரியோர்களும், சான்றோர்களுமாகத் திரளாக மக்கள் வந்திருந்தனர். இயல்பான உடல் அடக்க நடைமுறைகளிலிருந்து வேறுபட்டு அரண்மனை நிகழ்வுகள் இருந்தன. திரு. நந்தகுமார் அவர்கள் இளம் அகவையில் இயற்கையுடன் இயைந்தமை குடும்பத்தாருக்குப் பெரும் அதிர்ச்சியாகும். அனைவருக்கும் என் கையறுதலைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.