நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 ஜூன், 2015

திருக்குறள் பரப்பும் நம் தோழமை முயற்சியைப் பாராட்டுங்கள்!

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக விளங்கும் நூல் திருக்குறளாகும். திருக்குறளை ஈராயிரம் ஆண்டுகளாகப் பலரும் பலவகையில் போற்றிவருகின்றனர். தொழில்நுட்பம் பயன்படுத்தித் திருக்குறளை உலக அளவில் அறியச் செய்யும் முயற்சியை அண்மையில் அறிய முடிந்தது. திருக்குறள் பலூன் என்ற பெயரில் நடைபெறும் வியப்பு நிகழ்வு பற்றி அறிந்தால் அனைவரும் மகிழ்வது உறுதி. திருக்குறளைப் பரப்பும் தமிழ் உணர்வாளர்களைப் பாராட்டுவோம். இணைந்து கைகுலுக்குவோம்!

திருக்குறள் பலூன் முயற்சியை அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்


2 கருத்துகள்:

Dr B Jambulingam சொன்னது…

முதலில் உங்களுக்கு ஒரு கைகுலுக்கல், இவ்வாறான நிகழ்வைப் பகிர்ந்தமைக்கு. குறளைப் பரப்புவோரின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாராட்டிற்குரிய முயற்சி
பாராட்டுவோம்
வாழ்த்துவோம்
நன்றி ஐயா