நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 ஜூன், 2015

மலேசியாவைச் சேர்ந்த நல்லாசிரியர் இரா.சிவநேசன் மறைவு

திரு.இரா.சிவநேசன் அவர்கள்

மலேசியாவின் பேரா மாநிலத்தில் உள்ள உளு கிந்தா, ஆசிரியக் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்த விரிவுரையாளர் திரு. இரா.சிவநேசன் அவர்கள் இன்று (09.06.2015) மாலை 6.30 மணியளவில் மலேசியாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

22.05.2010 முதல் திரு. சிவநேசனார் அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். மலேசியாவில் நடைபெற்ற ஐம்பெருங்காப்பிய மாநாட்டிற்குச் சென்றபொழுது எங்கள் நட்பு உருவானது. அன்று முதல் தொடர்ந்து மலேசியா செல்லும்பொழுதெல்லாம் திரு. சிவநேசனார் அவர்களைச் சந்திப்பது உண்டு. மிகப்பெரிய நூலகம் இவர் இல்லத்தில் உள்ளது. இவர்தம் மாணவர்கள் மலேசியா முழுவதும் நிரம்பியுள்ளனர். இரா. சிவநேசனார் மலேசியத் தமிழ்க்கல்வி குறித்துப் பல ஆய்வுரைகள் வழங்கியுள்ளார். பேராசிரியர் இரா. சிவநேசனாரை இழந்து வருந்தும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும். பேராசிரியர் இரா. சிவநேசனாரின் நினைவைப் போற்றும்வகையில் அவருடன் தொடர்புகொண்டவர்கள் உரிய ஆக்கப்பணிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க இரா. சிவநேசனாரின் புகழ்!தொடர்புடைய பதிவுகள்

2 கருத்துகள்:

Dr B Jambulingam சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நல்லாசிரியர் இரா.சிவநேசனாரின் புகழ் ஓங்கட்டும்