நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஜூலை, 2013

சிங்கப்பூரில் தமிழ் இலக்கியச் சிறப்புரை...


தலைப்பு: நாட்டுப்புற இலக்கியமே  ஏட்டிலக்கியத்திற்கு முன்னோடி...

சிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தகைஞர்கள்:

பேராசிரியர் சுப. திண்ணப்பன், அவர்கள்
திரு. எம்.ஏ.முஸ்தபா அவர்கள்
திரு. அ.கி. வரதராசன் அவர்கள்

இடம்: சிங்கப்பூர்- காலாங் சமூக மன்றம்,  இரண்டாவது தளம்

நாளும் நேரமும்: 14.07.2013, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3 மணி

வெண்பாவில் அழைப்பு

இளங்கோ   வழங்குகிறார்  ஈடில்லாப் பேச்சு

வளங்கொழிக்க ஈந்திடுவார்  வாரி. - துளங்கிடும் 

செம்மைத்  தமிழின் சிறப்பெல்லாம்   மாந்திட

உம்மை  அழைத்தேன்  உவந்து.


நாட்டுப்   புறவியலின்   நற்பண்பை   ஆய்ந்ததால்  

தேட்டையுடன்   கூறிடுவார்   தேன்சொட்ட! -   கூட்டமாய்

குன்றாத   ஆர்வமுடன்   கூடிடுவோம்   வட்டமதில் 

நன்றாய்த்   தமிழருந்த   நாம்.

அன்புடன் அழைக்கின்றோம்! தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


ஏற்பாடு: இலக்கிய வட்டம், சிங்கப்பூர்

தொடர்புக்கு: 93754500 

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

செல்லும் திசையெல்லாம், சிங்கை மனமெல்லாம்,
ஒல்லும் வகையெல்லாம் ஓங்கி ஒலிக்கட்டும்
ஏட்டுப் புறப்பாட்டை ஏற்றும் இளங்கோவன்
நாட்டுப் புறப்பாட்டை நன்கு