புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்தல்.
புதுவையில் பன்னாட்டுப்
புத்தகக் கண்காட்சி இன்று(19.12.2012) மாலை தொடங்கியது. புதுச்சேரி வேல்.
சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை மாநில முதலமைச்சர்
மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்கள்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியதுடன், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினைந்திற்கும்
மேற்பட்ட நூல்களையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.
புதுவை அரசின்
சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. இராசவேலு அவர்களும். கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
புதுசேரிப் புத்தகச் சங்கத்திற்குச் சிறப்பான தொண்டு செய்தவர்களுக்கு விருதுகள்
வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கோ.முருகன் அனைவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கினார்.
புத்தகச் சங்கத்தின்
தலைவர் எம்.கே. சாயிகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் பாஞ்.
இராமலிங்கம் அவர்கள் புத்தகச் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். புலவர்
சீனு.இராமச்சந்திரன் அவர்கள், புலவர் நாகி அவர்கள், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து
அவர்கள், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் அரங்க. முருகையன் ஆகியோர்
உரையாற்றினர்.
புத்தகக் கண்காட்சி 19-12.2012 முதல் 30.12.2012 வரை நடைபெற
உள்ளது. காலையில் 11.30 முதல் இரவு 8.45 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும்.
இக்கண்காட்சியில் 104 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
முதலமைச்சர் அவர்கள் கண்காட்சியைப் பார்வையிடல். அருகில் அமைச்சர்கள்.
மேடையில் அறிஞர்கள்
முனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் முதல்வர் அவர்களிடம் விருது பெறல்
தியாகி மசீத் அவர்கள் முதல்வர் அவர்களிடம் பரிசு பெறல்
புதுவை முதல்வர் அவர்களின் அருகில் எம்.கே.சாயிகுமாரி அம்மா, வி.முத்து, மு.இளங்கோவன்
அமைச்சர் பி.இராசவேலு, புலவர் சீனு.இராமச்சந்திரன், மு.இ.
மு.இளங்கோவன் உரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக