நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 17 ஜூன், 2012

மதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…


சுப.முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை

மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 17.06.2012 காலை
பத்து மணியளவில் இனிதே தொடங்கியது. மதுரை வா.நேரு தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. சுப.முருகானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்சுபெரியார் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு அனைவருக்கும் பயிற்சி வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர்.

அறிமுகவுரை பிரின்சு


நேரு அவர்கள் தலைமையுரை


பார்வையாளர்கள்(ஒருபகுதி)


மு.இளங்கோவன்- சிறப்புரை

3 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அயராது தமிழ்ப்பணியாற்றும் தங்களுக்கு வாழ்த்துக்கள் முனைவரே.

anandam சொன்னது…

தமிழில் இணைய தளத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று அருமையாக, எளிமையாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள். நன்றி. உங்கள் தொண்டு தொடரட்டும்...சுப.முருகானந்தம்,பகுத்தறிவாளர் கழகம், மதுரை மாநகர்/

anandam சொன்னது…

தமிழில் இணைய தளத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று அருமையாக, எளிமையாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள். நன்றி. உங்கள் தொண்டு தொடரட்டும்...சுப.முருகானந்தம்,பகுத்தறிவாளர் கழகம், மதுரை மாநகர்/