நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 பிப்ரவரி, 2012

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா


முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் எழுபதாம் ஆண்டு அழைப்பு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியரும் தமிழிலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமைநலம் வாய்த்தவருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழாவினைத் தமிழறிஞர்கள் கொண்டாடி மகிழ உள்ளனர். தமிழ்வாழ்வு வாழ்ந்துவரும் துணைவேந்தர் அவர்களுக்கு நம் அன்பார்ந்த வாழ்த்துகள்.

நாள்: 05.02.2012 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
நிகழிடம்: நியூ உட்லண்டு உணவகம், சென்னை

வரவேற்புரை: முனைவர் இராமர் இளங்கோ

தலைமை: தோழர் இரா.நல்லகண்ணு

வாழ்த்துரை: திருவாரூர் எஸ்.எஸ்.மணியம்

வாழ்த்துரை

முனைவர் பொற்கோ
முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
பேராசிரியர் க.இராமசாமி
பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்
முனைவர் இரா.இளவரசு
திரு. பல்லடம் மாணிக்கம்

ஏற்புரை பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

நன்றியுரை: மே.து.இராசுகுமார்

தொகுப்புரை: முனைவர் ப.மகாலிங்கம்

ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.இரா.அரசு

தொடர்புக்கு: முனைவர் இராமர் இளங்கோ அவர்கள், சென்னை
+91 94444 94941

1 கருத்து:

T.S.Kandaswami சொன்னது…

எப்படி ஐயா எட்டயபுரத்து ஏந்திழை ஒருத்தியின் கருப்பை மட்டும் நெருப்பைச் சுமந்தது". சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குமுதம் வார இதழில் கவிப்பேரரசுஅவர்கள் வியந்து போற்றிய வைர வரிகள் இவை.
எப்படியப்பா வெள்ளலூர் நற்றாய் ஒருவரின் கருப்பை மட்டும் தமிழை உயிர்த்தது ! அதுவும் முத்தமிழை. ! இனிமேல் கற்பதற்கு தமிழில் நூல்களே இல்லையோ என ஐயுறும் வண்ணம் அனைத்தையும் கற்று, மேடையில் சொற்சிலம்பம் ஆடும் இயற்றமிழ், புரட்டசி மாத முன்னிரவு நெரங்களில், வெள்ளலூரையே மயக்கத்தில் ஆழ்த்தும் மோகனப்பண் பாடும் இசைத்தமிழ்,( உண்மையிலேயே தம்பி மோகனப்பண்ணில் அருமையாகப் பாடுவார் ), நடிக்கத்தெரியாத நாடகத்தமிழ்--நடிக்கத்தெரியாத நாடகத்தமிழா? வியப்பாக இருக்கிறதா? ஆம் . ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிட்டால் நடிப்புக்கு அங்கே இடமேது ? தம்பியோடு ஒரே பள்ளியில் பணிபுரிந்த அந்த நாட்கள் இன்னும் பசுமையாக என் மனதில் இருக்கின்றன..தமிழன்னைக்குப் பேராசை அதிகம் .இதுவரை தம்பி அணிவித்த மலர்கள்
போதாது போதாது .இன்னும் நிறைய வேண்டும் எனத் தம்பியிடம் எதிபார்க்கிறாள்..வாழ்க்கையில் பல உச்சங்களைத் தொட்ட தம்பி, இன்னும் நெடு நாள் வாழ்ந்து பற்பல மலர்களைத் தமிழ்த்தாய்க்கு அணிவித்து அழகு சேர்ப்பார்