நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவுக்கு மலர்வணக்கம்


சரசுவதி கண்ணப்பன்(பாவேந்தரின் மூத்தமகள்,22 அகவையில் எடுக்கப்பெற்ற படம்)

பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி அவர்கள் தம் 92 ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை எய்தினார், அவரின் மறைவுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவேந்தரின் மகன் திரு.மன்னர்மன்னன் அவர்கள் தலைமையில் புதுவைத் தமிழறிஞர்கள், பாவலர்கள், பெரியோர்கள் பலர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செய்தனர்.

பாவேந்தரின் குடும்பத்தின் சார்பில் மன்னர்மன்னன், பாரதி,செல்வம்,தென்னவன்,அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவைத்தமிழறிஞர்கள் பாவலர்மணி சித்தன், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முத்து, திரு. வி.பி.சிவக்கொழுந்து, கவிஞர் கல்லாடன், புரவலர் ந.கோவிந்தசாமி,பேராசிரியர் தெ.முருகசாமி, நந்திவர்மன், வழகறிஞர் கோவிந்தராசன், பேராசிரியர் க.இளமதிசானகிராமன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கனகராசு, முனைவர் செங்கமலத் தாயார், பாவலர் மாநி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மன்னர் மன்னன் ஐயா தம் தமக்கையாரின் சிறப்பினையும் அக்காலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திருமணச் சிறப்பு நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார்.


மன்னர்மன்னன், மு.முத்து, பாரதி,மு.இளங்கோவன், மதனகல்யாணி உள்ளிட்டோர்


மன்னர் மன்னன்,மு.முத்து,புரவலர் ந.கோவிந்தசாமி,மாநி உள்ளிட்டோர்


வி.பி.சிவக்கொழுந்து, மு.முத்து,கோ.பாரதி, வழக்கறிஞர் கோவிந்தராசு, மு.இ.

1 கருத்து:

பழமைபேசி சொன்னது…

அவர்களுக்கான அஞ்சலிகள்!