நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 1 செப்டம்பர், 2011

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த நாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென விழாக்குழு அமைக்கப்பெற்று உரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. விழாக்குழுவில் முனைவர் மு.இளங்கோவன்,முனைவர் ஆ.மணி, முனைவர் உரு. அசோகன்,பைந்தமிழ்ப்பாவலர் பூங்குன்றன், தனித்தமிழ்ப்பாவலர் சீனு.தமிழ்மணி,புலவர் நாகி, புலவர் இ.திருநாவலன், வசந்தகுமார், அ.சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். விழா நடைபெறும் நாள், நேரம்,இடம், நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைகின்றன.

நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 - 8.00 மணி
இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001

சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல்,பத்துப்பாட்டு நூல்கள்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய நூல்களுக்கு அரும்புலமை நலம் தழைக்க உரை வரைந்தும், படைப்பு நூல்கள் பலவற்றைப் படைத்தும் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச்சான்றோர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972) அவர்களின் பிறந்தநாள் விழாவும் படத்திறப்பு நிகழ்ச்சியும் சிறப்புற நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.


நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை : முனைவர் கோ.விசயவேணுகோபால் அவர்கள் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).

முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், புலவர் நாகி அவர்கள்

வரவேற்புரை : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

பெருமழைப்புலவரின் படத் திறப்பு: முனைவர் ழான் லூய்க் செவ்வியார் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).

சிறப்புரை : தமிழ்க்கடல் இரா.இளங்குமரனார் அவர்கள்
(நிறுவுநர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)

நன்றியுரை : முனைவர் ஆ.மணி அவர்கள்

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த நாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அய்யா மிக்க மகிழ்ச்சி, தமிழாய்ந்த தமிழறிஞர்களைப் போற்றும் தங்களை தமிழுலகம் போற்றும். இயன்ற அளவில் உதவிகள் செய்வோம்.
நன்றி, தமிழ்நாடன்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா உன்னதமான பணி. தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகள். நிகழ்ச்சியை மனக்கண்ணில் கண்டு களிப்போம்.

ஒதிகை மு.க.அழகிரிவேல் சொன்னது…

தகவலுக்கு நன்றி ஐயா,தங்களின் புகைபடத்தை மதன் கார்க்கியின் http://www.nickonken.com/www/#/photography/life/lifestyle/ பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.