நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 செப்டம்பர், 2010

சேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...


பேராசிரியர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கும் மு.இளங்கோவன்


பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. இடம்.கௌசானல் அரங்கம்

தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.துறைப்பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வாளர் ஆனந்தன் அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள்,ஆங்கிலப் பேராசிரியர்கள் முப்பதுபேரும்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் முப்பதுபேரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வரலாறு,தமிழ்த்தட்டச்சு,புகழ்பெற்ற தளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,மின்னஞ்சல் வசதி,புகழ்பெற்ற இணைய நூலகங்கள், விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்படுத்தினார்.


தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை விளக்கும் மு.இளங்கோவன்

மாலை 4 மணிக்குப் பயிலரங்கு இனிது நிறைவுற்றது.

1 கருத்து:

J.P Josephine baba சொன்னது…

பங்குபெற்றவர்களில் நானும் ஒருவர். மிகவும் பயனுள்ள இணையத்தளங்களை பற்றி அறியமுடிந்தது. முனைவரின் விளக்கவுரை, பிரியும்படியாகவும் சுவார்ஸ்யமானதாகவும் இருந்ததால் ஈடுபாடுடன் பங்குபெற இயன்றது. வாழ்த்துக்கள் நண்பரே!