நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 செப்டம்பர், 2010

பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

திருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.

தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.

ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு - 9443851775

2 கருத்துகள்:

சகாதேவன் சொன்னது…

வணக்கம்.
2008-ல் நெல்லையில் நடந்த பயிலரங்கில் கலந்து கொண்டேன். அதன் ரிபோர்ட் பாருங்கள்.
vedivaal.blogspot.com/2008/06.blog-spot_13.html
அடுத்த பயிலரங்கம் எப்போது வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.

15/09 அன்று நடக்கவிருக்கும் அரங்கத்தில் முன்னாள் மாணவர்களும் கலந்து கொள்ளலாமா?
நான் சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவன்(1959- 62).
என் ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை பற்றிய என் வலைப்பதிவையும் பாருங்களேன்.
vedivaal.blogspot.com/2007/08/blog-spot.html

15 அன்று நான் வருவேன். நன்றி.

Esha Tips சொன்னது…

அருமை, நல்லதொரு முயற்சி பாராட்டுகள், வாழ்த்துக்கள்