நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்!


தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்

புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்கள் உடல்நலக் குறைவுற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (16.09.2009) இயற்கை எய்தினார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கிய இவர் தமது எளிமையான குரல்வளத்தால் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களால் மதிக்கப்பட்டவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.

மக்கள் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு இவர் பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று இவரின் இளமைக்கால வாழ்க்கையப் படமாக்கினர். இவர் தம் பிறந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தவர். இவர் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். ஒரே மகள் இவருக்கு.

மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண விழாவில் இலக்கிய வீதி இனியவன் ஐயா அவர்களுடன் தென்கச்சியாரைக் கண்டு வணங்கியுள்ளேன். எங்கள் ஊருக்கும் அவர் ஊருக்கும் ஐந்து கல் தொலைவு இருக்கும். எங்கள் பகுதியினரான கண்ணியம் இதழாசிரியர் கோ.குலோத்துங்கள் அவர்கள் தென்கச்சியாரின் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் தம் இதழில் வெளியிட்டார். அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் என்னிடம் உள்ளது. பிறகு வெளியிடுவேன்.

தென்கச்சியாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், இலட்சக் கணக்கான வானொலி நேயர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.

15 கருத்துகள்:

Krishna சொன்னது…

It's a heart breaking news to me.

I really love Mr. Thenkachi Swaminathan for his Tamil slang.

I prey that he will reach god.

puduvaisiva சொன்னது…

is a great loss Regular Radio Lovers.

O God give to him peace of Mind..

Indian சொன்னது…

Very sad to know his demise.
May his soul rest in peace.

Robin சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த பெரிய மனிதர். ஆழ்ந்த அனுதாபங்கள்!

Unknown சொன்னது…

He was a lovevable presenter for all the tamilians. His infirmative talks reached every corner of tamilnadu including the uneducated poors etc., My deep condolences to his family and all tamils.

சந்தர் சொன்னது…

ரொம்ப சிம்பிளானவர். நான் இருக்கும் ஏரியாவில் தான் இருந்தார். எத்தனையோ முறை பஸ் ஸடாண்டில் பார்த்திருக்கிறேன். பேச கூச்சம் காரணமாக இயலவில்லை. அவர் ஆத்மா சாந்தியடைவதாக.

சந்தர் சொன்னது…

மிகவும் ஸிம்பிளானவர். என்னுடைய ஏரியாவில் தான் இருந்தார். எத்தனையோ முறை நான் அவரை பஸ் ஸ்டாண்டில் பார்த்திருக்கிறேன். கூச்சம் காரணமாக பேசியதில்லை. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

துளசி கோபால் சொன்னது…

எங்கள் இரங்கல்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.

துபாய் ராஜா சொன்னது…

அதிர்ச்சியான செய்தி.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

அதிர்ச்சியளிக்கும் செய்தி! :-((

மறக்க முடியாத் குரல் அவருடையது.

அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கல்களை உரித்தாக்குகிறேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிகப் பெரிய நஷ்டம் அவரது மறைவு. எத்தனை உள்ளங்களுக்கு உற்சாகம் கொடுத்துவந்தார்.!!

நேருக்கு நேர் உரையாடுவது போல அப்படி ஒரு நெருக்கம் கொடுத்துப் பேசுவார்.

மறைமலை இலக்குவனார் சொன்னது…

வானொலியைத் தேனொலியாக்கிய
தமிழர்,நாட்டுப்புறப் பண்பாட்டை நகர்ப்புறத்தில் செழிக்கச் செய்த தமிழர் மறைந்தாரா?நம்பமாட்டேன்.
கூற்றுவனே!எங்கள் குரல்வளையை ஏன் முறித்தாய்?நாநயம் என்னும் சொல்லின் பொருளாய் அமைந்தவரை ஏன் பறித்தாய்?
அதிர்ச்சியுடன்,மறைமலை

Jeyapalan சொன்னது…

என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

sharma.aps சொன்னது…

எப்பேர்ப்பட்ட மனிதர்... யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர். எல்லோருக்கும் நல்லவராகவே விளங்கிய மாமனிதர். உண்மை, நேர்மை, எளிமை ஆகியவற்றின் திருவுருவமாகத் திகழ்ந்தவர். அவரது விரிவான வாழ்க்கை வரலாறு கொண்ட நேர்காணல் தமிழான்லைன்.காம்/தென்றலில் வெளியாகி உள்ளது.

http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=102&cid=4&aid=5596&m=a

Ashwinji சொன்னது…

காலனுக்கு அந்தகன் (குருடன்) என்று ஒரு பெயர் உண்டு. இதயமற்றவன் என்றும் இனி நாம் அழைக்கலாம். தென்கச்சியாரின் இதமான குரலை இனி புதிதாய்க் கேட்க முடியாது. பதிவுகளை ரசிப்போம். இதய அஞ்சலிகள்.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com