நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் உடல் அவர் மாமனார் ஊரான துகிலி கஞ்சனூரில் நல்லடக்கம்!



சென்னைத் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு நோயால் இயற்கை எய்திய தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் உடல், மருத்துவமனையில் இருந்து நேராக அவர் மாமனார் ஊரான துகிலி கஞ்சனூர் எடுத்துச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.(துகிலி கஞ்சனூர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறை,சூரியனார்கோயில் அருகில் உள்ளது).

உடையார்பாளையம் வட்டத்திலுள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம்,செயங்கொண்டம், தா.பழூர்.ஆண்டிமடம், உதயந்ததம், கோடாலிகருப்பூர், உட்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலும், அணைக்கரை,திருப்பனந்தாள், சோழபுரம்,கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலும் தகவல் தெரிந்து அவரின் உறவினர்கள் நண்பர்கள் கவலைகொண்டு அவர் உடலைக் காணக் கூடியுள்ளனர்.

அரியலூரில் நடைபெறும் தமிழ்வழிக்கல்வி வலியுறுத்தும் போராட்டக்களத்தில் தென்கச்சியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

KAVIYOGI VEDHAM சொன்னது…

யான் மிக விரும்பும் ஒரு நல்ல சிந்தனையாளர்.சிரிக்கப்பேசியே பலரது நோயைப்போக்கியவர். விவசாயிகளின் உற்ற நண்பர் காலமானது குறித்து வருந்துகிறேன்.அவரது குடும்பத்தார்க்கு என் அஞ்சலியைத்தெரிவியுங்கள்.,
யோகியார் வேதம்(யு.எஸ்.ஏ)16-09-09