தமிழ் ஒருங்குகுறி (unicode) தொடர்பில் தமிழ் மொழிக்கு உரிய இடம் தேவை எனப்பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில் இது தொடர்பான சில மகிழ்ச்சி செய்திகளைப் புதுச்சேரியில் நடைபெற்ற வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள். அப்பேச்சு இப்பொழுது செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. உலக அளவிலான ஒருங்கு குறி அமைப்பு நம் மொழியின் முதன்மையை உணரத்தொடங்கியுள்ளது.
அது குறித்த தினமணி (06.02.2008) செய்தியைத் தமிழ் இணைய ஆர்வலர்களுக்குத் தருவதில் மகிழ்கிறேன்.
கணினியில் தமிழ் எழுத்துகளுக்கு கூடுதல் இடம்: பன்னாட்டு அமைப்பு ஆய்வு
சென்னை, பிப். 5: தமிழ் எழுத்துக ளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான "யூனிகோட் கன்சார்டியம்' ஆராய்ந்து வருகிறது.
இந்தக் கூட்டமைப்பில் "யாகூ', "கூகுள்', "மைக்ரோசாஃப்ட்' உள் ளிட்ட உலகின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகளாவிய சாஃப்ட்வேரில் தமி ழுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவு. அதாவது "8 பிட்' அளவு இடங்களே உள்ளன. இதன் மூலம் கணினியில் தமிழை இயக்கு வதற்கு போதிய அளவுக்கு திறமோ, தரமோ இருக்காது என்று தமிழக அறிவியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே, தற்போதுள்ளதை விட அதிகமாக அதாவது, ஆங்கிலம் போல் "16 பிட்' அளவு இடங்களை, தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழகம் கோரி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகி ருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மு.பொன்ன வைக்கோ உள்ளிட்டோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது.
அக்குழு பல்வேறு ஆய்வுக் கூட் டங்களை நடத்தி, "16 பிட்' இடங் கள் தேவை குறித்த காரணங்களைப் பன்னாட்டுக் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளது.
இதையடுத்து, சென்னைக்கு வந்த பன்னாட்டுக் கூட்டமைப்பு தமிழக வல்லுநர் குழுவுடன் விவாதித்தது.
முதல் கட்டமாக தமிழ் அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் குறைவான இடங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து கன்சார்டியம் உணர்ந்துள்ளது.
""தமிழ் எழுத்துருக்களுக்கு தற் போதைய "8 பிட்' இடம் போதாது.
"16 பிட்' இடம் ஏன் தேவை என்ற காரணத்தை விளக்கிய பிறகு தற் போது இதில் உள்ள சிக்கலை பன் னாட்டு கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய முன்னேற்றம்'' என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்தது.
"16 பிட்' முறை நடைமுறைக்கு வந் துவிட்டால், ஆங்கிலம் போல் ஒவ் வொரு தமிழ் எழுத்துக்கும் ஒவ் வோர் இடம் கிடைக்கும். ஒரே இயக்கத்தில் ஓர் எழுத்து எளிதில் பதிவாகும். 25 சதவீத நேரம் மிச்ச மாகும். தமிழ் இயக்கத்தை விரை வில் செயல்படுத்தலாம். தரமும் மேம்படும். உலக அளவில் வணிகம், அறிவியல், ஊடகம் ஆகிய அனைத் துத் துறைகளிலும் தமிழ் எழுத்து களை விரைவில் பதிவு செய்யலாம்.
எல்லாவற்றையும் விட, தற்போ தைய முறையால் ஏதேனும் எழுத் துப் பிழை நேர்ந்தால், அதனால், சட் டச் சிக்கல் தோன்ற வாய்ப்புண்டு.
16 பிட் இடம் கிடைத்தால், அச்சட்டச் சிக்கல் தோன்றவே வழியில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமணி(06.02.2008)
2 கருத்துகள்:
முக்கியமான கட்டுரை.
நன்றி.
முத்தமிழிலும் மீள்பதிவு செய்திருக்கிறேன்.
நல்ல சேதி. அண்மைய கூட்டத்தை அடுத்து இது தொடர்பான விவரங்களை எதிர்ப்பார்த்து இருந்தேன். தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி.
//ஒரே இயக்கத்தில் ஓர் எழுத்து எளிதில் பதிவாகும். 25 சதவீத நேரம் மிச்ச மாகும். தமிழ் இயக்கத்தை விரை வில் செயல்படுத்தலாம். //
இதே போன்ற கருத்து TUNEஐ முன்னிறுத்தியும் தெரிவிக்கப்பட்டது. எனக்கு இது புரியவில்லை. குறிமுறைக்கும் தட்டச்சு வேகத்துக்கும் தொடர்பில்லை தானே? விசைப்பலகை வடிவமைப்புக்கும் தட்டச்சு வேகத்துக்கும் தான் தொடர்பு உண்டு. ஒருங்குறி சீர்திருத்தப்பட்டால் கோப்பின் இட அளவுகள் குறையும் என்பது முதற் சாதகம்.
கருத்துரையிடுக