நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 பிப்ரவரி, 2008

குறுந்தொகை பாடிய புலவர்கள்

சங்க இலக்கிய நூல்களில் குறுந்தொகைக்கு உயரிய இடம் உண்டு. ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல் நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்டது.இந்நூலில் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலும் உள்ளது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவன் பெயர் தெரியவில்லை. இந்நூலின் 307,391 ஆம் பாடல்கள் ஒன்பதடி உள்ளதாகக் குறிக்கும் உ.வே.சா அவர்கள் 391 ஆம் பாடல் சில படிகளில் எட்டடியாக உள்ளது என்கிறார் (ப.5) .ஆனால் 307 ஆம் பாடல் ஒன்பது அடியாகவே எல்லாப்படிகளிலும் உள்ளது. இந்த ஒரு பாடலை நீக்கிவிட்டால் மற்ற நூல்களைப் போலவே 400 பாடலாகக் குறுந்தொகை அமையும் என்கிறார் உ.வே.சா.

இந்நூல் பாடல்களைப் பாடிய புலவர்கள் 205 புலவர்கள் ஆவர். பத்துச் செய்யுட்களைப் பாடிய புலவர்களின் பெயர் தெரியவில்லை. கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்தால் 206 புலவர்கள் குறுந்தொகையைப் பாடியுள்ளமை புலனாகும். இவ்வெண்ணிக்கயில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. (இவை பற்றி விரிவாகப் பின்பு எழுதுவேன்)

2 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

பதிவுக்கு மிக்க நன்றி. அறிந்திராத சுவையான தகவல்கள்.

/* .(இவை பற்றி விரிவாகப் பின்பு எழுதுவேன்)*/

கட்டாயம் எழுதுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஊக்க மொழிகளுக்கு நன்றி.
மு.இளங்கோவன்