அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் அமைப்புகளுள் சிகாகோ தமிழ்ச்சங்கம் முதன்மையானது ஆகும். இச்சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழறிஞர்கள் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். ஐந்தாவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெறும் தமிழறிஞர்கள் நாள் விழா 27. 09. 2025 காரி(சனி)க் கிழமை காலை 9. 30 மணி முதல் 11. 30 மணி வரை (இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 8 மணி முதல் 10 மணி வரை) கொண்டாடப்படுகின்றது.
இந்த விழாவில் மயிலை சீனி. வேங்கடசாமி, ந. பிச்சமூர்த்தி, குன்றக்குடி அடிகளார், இராஜம் கிருஷ்ணன், தி.க. சிவசங்கரன், இரா. சாரங்கபாணி ஆகிய அறிஞர் பெருமக்களின் புகழ்வாழ்வும் தமிழ்ப்பணிகளும் நினைவுகூரப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் பிரசாத் இராசாராமன், அரசர் அருளாளர், க. பஞ்சாங்கம், சு. வேணுகோபால், மு. இளங்கோவன், பழமைபேசி, அருள்மொழி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இணைய வழியில் அமையும் இந்த நிகழ்வை உலகின்
எந்தப் பகுதியிலிருந்தும் கண்டுகளிக்கலாம். அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பணிகளை அறிவதற்குத்
தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக