திருவண்ணாமலையில் அரிமா சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா வரும் 16.01.2025 (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் கொண்டாடப்பட உள்ளது.
திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திரு. சி. சி துரை அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் R. அன்பரசு அவர்கள் விழாவைத் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றுகின்றார். அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் பலரும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்வுகளாக நடன அரங்கம், இயல் அரங்கம், இசை அரங்கம், நாடக அரங்கம், கலை அரங்கம் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நடன அரங்கில் செல்வி சங்கரின் நாட்டிய நிகழ்ச்சியும், இயல் அரங்கில் பாவலர் வையவனின் உரைவீச்சும், இசை அரங்கில் முனைவர் மு. இளங்கோவனின் நாட்டுப்புற இசைப்பாடல் உரையும் நாடக அரங்கில் முனைவர் வேல. இராமமூர்த்தியின் மரத்தின் மடியில் உலகம் என்னும் நாடகமும், கீதபாரதி கலைக்கூடம் பாரதி வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளன.
தமிழ் ஆர்வலர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அரிமா சங்கத்தின் தலைவரும், தமிழ்ப்பற்றாளருமான சி. சி. துரை அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக