தமிழிசைத்
தொடர்பாக
ஆய்வுக்
கட்டுரைகள்
/ கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன!
தமிழிசையின் சிறப்பினை வளரும் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக மலேசிய நாட்டின் ஈப்போ மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு 2022, நவம்பர் 20 இல் நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழி, கலை, பண்பாட்டோடு இணைந்திருக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் ஈப்போ வெற்றித் தமிழர் பேரமைப்பும் இணைந்து, உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து இந்த உலகத் தமிழ் இசை மாநாடு – 2022 ஐ நடத்துகின்றன.
தமிழிசை மாநாடு நடைபெறும் நாளன்று பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சிக் கூடம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ் இசைத் தொடர்பான ஆவணப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் இம்மாநாட்டினை ஒட்டி மாநாட்டு மலர் ஒன்று வெளிடவும் உள்ளனர். இந்த மாநாட்டு மலருக்குத் தமிழ் இசைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழிசை சார்ந்த கட்டுரைகள் / கவிதைகளை worldtamilmusiccon2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31/8/2022 - க்குள் அனுப்பி வைக்கலாம்.
உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களின் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு எண் +6 012500 6161
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக