நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் முதுகலை, மற்றும் உயராய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 22.09.2015 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கி, நடைபெறுகின்றது. தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம்- கல்வி வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்படுகின்றது.

பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது. பன்னாட்டுக் கருத்தரங்கில் மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான திரு. மன்னர் மன்னன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, தொடக்கவுரையாற்றுகின்றார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கின்றனர்.

மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பீ.மு.மன்சூர் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்க மதிப்பீட்டு உரை வழங்குகின்றார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ்வளர்ச்சியும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றுகின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் சிராஜூதின் 0091 9865721142




1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வாழ்த்துக்கள்.