நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 மே, 2015

முனைவர் பா.சுந்தரவடிவேல் அவர்களின் பணிகளுக்குப் பாராட்டுகள்!

முனைவர் பா.சுந்தரவடிவேல்

அமெரிக்காவில் வாழும் என் அருமை நண்பர் பா. சுந்தரவடிவேல் அவர்கள் தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புகளை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிப்பதில் வல்லவர். தமிழர்களின் மூச்சுப்பயிற்சிக் கலைபற்றி உலக அளவில் பல ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர். திருமூலரின் கருத்துகள் எந்த அளவு அறிவியல்தன்மை பெற்றவை என்பதைச் சான்றுகாட்டி விளக்குவதில் வல்லவர். கறம்புக்குடியில் பிறந்த இந்தத் தமிழுள்ளம் ஆங்கிலத்தில் வழங்கும் உரையையும் அதனைச் செவிமடுக்கும் அமெரிக்கர்களையும் காணொளியில் கண்டு மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் சார்ல்சுடன் மாநகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் பா. சுந்தரவடிவேல் அவர்களை 2011 இல் பெட்னா விழாவில் கண்டு உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு இணையாக ஒருவரைக் காட்டுவது அரிது. அவர் அலுவலகத்தையும் ஆய்வுக்கூடத்தையும் பார்வையிடும் வாய்ப்பு எனக்கு அப்பொழுது அமைந்தது. இவர்போல் ஆக்கப்பணிகளைச் செய்பவர்கள்தான் தமிழுலகுக்குத் தேவை.

முனைவர் பா.சுந்தரவடிவேல் அவர்களின் உரைகேட்க இங்கே சொடுக்கவும்.


2 கருத்துகள்:

Dr B Jambulingam சொன்னது…

மற்றொரு அறிஞர் அறிமுகம். பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முனைவர் பா சுந்தர வடிவேல் அவர்களைப் பாராட்டுவோம்