நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 ஏப்ரல், 2015

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துகள்!  மலேசியாவில் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் அமைப்புகளுள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குச் சிறப்பிடம் உண்டு. அந்த அமைப்பின் தலைவராகப் பேராசிரியர் . மன்னர் மன்னன் அவர்கள் அண்மையில்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மகிழ்கின்றோம்.

  பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒருவராகப் பங்காற்றி வருபவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் மலேசியா முழுவதும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருவதை நான் நேரில் அறிவேன்.

  தாயகத் தமிழர்களை வரவேற்று விருந்தோம்புவதில் பேராசிரியர் ம. மன்னர் மன்னன் அவர்கள் முன்னிற்பவர். மலேசியாவின் அனைத்து அமைப்புகளிடத்தும் நல்லுறவு பேணுபவர். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அரவணைத்துப் போகும் உயர்பண்புகொண்டவர்.


  திரு. ம. மன்னர் மன்னன் அவர்களின் தலைமையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புறத் தமிழ்ப்பணியாற்ற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா

Dr B Jambulingam சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.