நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 மார்ச், 2015

பாளையங்கோட்டை, மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் ஆவணப்படம் திரையிடல் சிறப்பு நிகழ்ச்சி!  திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் 14. 03. 2015, காரி(சனி)க்கிழமை மாலை 4 மணிக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.  உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவர் முனைவர் பா. வளன் அரசு அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அ. இராசகிளி அவர்கள் இறைவேண்டல் நிகழ்த்துவார். நல்லாசிரியர் க. சாண்பீற்றர் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார். 

  முனைவர் மு.இளங்கோவன் தொடக்கவுரையாற்ற உள்ளார். சீர்மிகு இராமாநுசக் கள்ளப்பிரான் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், பாவலர் த.மு.சா. காசாமைதீன் அவர்கள் பாராட்டுரை வழங்கவும் உள்ளனர். திருக்குறள் இரா.முருகன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

நாள்: 14.03.2015, சனி மாலை 4 மணி

இடம்: மாநிலத் தமிழ்ச்சங்கம், 
24 / 50, திருவனந்தபுரம் சாலை பாளையங்கோட்டை – 627 002


தொடர்புக்கு: 75983 99967, 89036 41379

கருத்துகள் இல்லை: