திருமுருகாற்றுப்படையைக் கற்போர் முருகப்பெருமானின்
அருளுருவம் காண்பர். அவ்விறைவனின் அறப்பண்பும், மறப்பண்பும் நினைவூகூரப்பெறுவர். அருட்புலவர்
நக்கீரர் அற்றைநாள் இயற்கைக் காட்சிகளை இந்நூலில் காட்டும் பாங்கினை எம் போலும் இயற்கையில்
திளைப்போர் எண்ணியெண்ணி வியப்பர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்
அவர்கள் முருகப்பெருமான் அருள்பெற்றவர் போல் இத் திருமுருகாற்றுப்படையை எண்ணி, எண்ணி
உருகிப் பாடியதை அவர் குரலில் கேட்டதிலிருந்து
, திருமுருகாற்றுப்படையின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்.
அதற்காகப் “பலர்புகழ் ஞாயிறு” கடலிலிருந்து
தோன்றி, உலக உயிர்களை ஊக்கம்பெறச் செய்யும் காட்சியைச் சுவைக்கப் பல நாள், பல ஊர்களிலிருந்து,
ஒவ்வொரு மணித்துளியாகக் கடற்காட்சியைக் கண்டுள்ளேன். இன்று புதுச்சேரியை அடுத்துள்ள
சிற்றூர்களிலிருந்து சில கடற்காட்சிகளைக் காணும் வாய்ப்பு அமைந்தது. கடலிலிருந்து கதிரவன்
தோன்றுவதைப் பார்த்ததுடன் மட்டும் அமையாமல் கடலையொட்டிய ஆற்றங்கரையிலிருந்தும் கதிர்த்தோற்றம்
காண முடிந்தது.
நன்றி: Villa Paradise
1 கருத்து:
ரசனையை ரசனையோடு ரசிக்க மனமும் நேரமும் வேண்டும். தாங்கள் அனுபவித்ததோடு மட்டுமன்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
கருத்துரையிடுக