பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்
(28. 05. 1914 - 09. 06. 1981)
தமிழின மீட்சிக்கு உழைத்த தந்தை பெரியார்
போலவும், தமிழ்மொழி மீட்சிக்கு உழைத்த மொழிஞாயிறு பாவாணர் போலவும், தமிழிசை மீட்சிக்கு
உழைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழ் இலக்கியங்களில்
பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில்
எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள்
மன்றத்தில் பாடிக்காட்டி விளக்கிய இப்பெருமகனாரை அவரின் நினைவுநாளில் நினைவுகூர்வோம்.
குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய பாடல்களைப்
பரப்புவோம். அவர் நூல்களை அறிஞர் உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். மீண்டும் தமிழகத்தில் தமிழர் இசைமுழக்கம் கேட்க வழிசெய்வோம்.
“தமிழுக்குத் தொண்டுசெய்வோர்
சாவதில்லை” என்னும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம்.
1 கருத்து:
அறிஞர்களைத் தாங்கள் நினைவுகூர்ந்து போற்றுவது பாராட்டத்தக்கது.
கருத்துரையிடுக