தமிழகத்தில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றும்
தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை குறித்த அறிவினைத் தாங்கி
நிற்கும் களஞ்சியங்களாக உள்ளன. அண்மையில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலுக்குச் செல்ல
நேர்ந்த்து. இக்கோயில் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர், திலகவதியார் பெருமையை இவ்வுலகிற்கு
நினைவூட்டும் வகையில் இன்றும் கண்ணைக் கவரும் கோபுரங்களுடன் நிற்கின்றது. அப்பர்
16 பதிகங்களை இக்கோயில் இறைவன்மீது பாடியுள்ளார். சம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர்
ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரியார் இக்கோயிலைப் போற்றிப் பாடியுள்ளார். வள்ளலாரும்
இக்கோயிலைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
இக்கோயிலில் கருங்கல்லில் வடிக்கப்பெற்ற
கற்சிலைகளைக் கண்டு வியப்புற்றேன். அக்கால மக்களின் அணிகலன், உடைகள், ஒப்பனைத் திறன்
இவற்றைக் காட்டும் இச்சிலைகளை நம் மக்கள் போதிய அளவு கவனம் செலுத்திப் பாதுகாக்காமல்
கைவிட்டதை நினைத்து வருந்தினேன். சிலைகளின் உடல் உறுப்புகளை நம்மவர்கள் சிதைத்துள்ளதை
இப்பொழுது சரிசெய்து பாதுகாக்க முன்வந்துள்ளவர்களை நன்றியுடன் போற்ற வேண்டும்.
பல்வேறு இறைப்பெருமைகளை நினைவூட்டும் வகையில்
இங்குள்ள சிலைகள் வடிக்கப்பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்த நிகழ்வு, நாட்டியப்பெண்களின்
ஒப்பனை நிறைந்த சிலைகள் கலையுணர்வாளர்களுக்குப் பெருவிருந்தாக இருக்கும். பார்வைக்குச்
சில கலைஞர்களின் கைவண்ணத்தைப் படையலாகத் தருகின்றேன்.
2 கருத்துகள்:
சிற்பம் ஒவ்வொன்றும் அழகோ அழகு
திருவதிகை கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். இச்சிற்பங்களைப் பார்த்துள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றி. அக்கோயிலில் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டுள்ள புத்தரையும் படமெடுத்திருக்கலாமே? 1990களின் இறுதியில் முதன்முதலாக களப்பணி சென்றபோது அந்த புத்தரை நான் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது.
கருத்துரையிடுக