நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

திருவதிகையில் 108 கரணங்கள் அடங்கிய சிற்பங்கள்


கரணம் என்பது கையால் செய்யும் வினையம் என்று இசைமேதை வீ..கா.சுந்தரம் அவர்கள் குறிப்பிடுவார் (... II, பக்கம்44, 45). சிதம்பரம், தஞ்சாவூர், குடந்தை கோயில்களில் 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன என்ற குறிப்பைப் படித்துள்ளேன். கரணங்கள் தமிழர்களின் கூத்து, நாட்டிய மரபுடன் தொடர்புடையன. இது பற்றி இத்துறையில் வல்லுநர்கள் ஆராய வேண்டும். சிலம்பிலும் அதன் உரையிலும் கரணம் பற்றிய குறிப்புகள் மிகுதியாகப் பதிவாகியுள்ளன.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் முகப்பு வாயிலில் 108 கரணங்களை விளக்கும் சிற்பங்களைக் கண்டு வியந்தேன். மொத்தம் நான்கு பகுதியாக இக்கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் மூன்று வரிசைகளைக் கொண்டது. ஒரு வரிசைக்கு 9 என்ற வகையில் 3x9=27 என்ற வகையில் 4x 27 ஆக 108 கரணங்கள் திருவதிகை கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு சிற்பத்தையும் தனித்தனியாகப் படம் எடுத்து, அதனைப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தரமான புகைப்படக் கருவி, ஒளி ஓவியர், உயரத்தில் அமர்ந்து எடுக்கத்தக்க வகையில் ஏணிகள், உதவியாளர்கள் தேவை. பருந்துப் பார்வையாக நான் எடுத்த சில படங்களைப் பார்வைக்குத் தருகின்றேன். தமிழாராய்ச்சி நிறுவனங்களிலிருந்து விடுபட்டு ஆய்வாளர்கள் களப்பணிக்கு வரும்பொழுது தமிழ் ஆவணங்கள் தொகுக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அதுவரை இருக்கைகள் தேயுமே தவிர, தமிழாய்வுகள் விடத்தரை இலை அளவுகூட வளர வாய்ப்பு இல்லை.

கருத்துகள் இல்லை: