நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

"செவாலியே" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை கோரியோ” புதினம்செவாலியே மதனகல்யாணி அவர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரெஞ்சு எழுத்தாளர் ஒனொரே தெ பல்சாக்( Honore De Balzac 1799-1850) எழுதிய லெ பேர் கோரியோ(Le pere Goriot) என்ற நூல் செவாலியே மதனகல்யாணி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தந்தை கோரியோ” என்ற பெயரில் சாகித்ய அகாதெமி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தையும் பாரிசு நகரத்தையும் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகளையும் இந்தப் புதினம் சிறப்பாக விளக்கியுள்ளது.

கோரியோ என்ற தந்தை தம் இரு மகள்களின் மேல்கொண்ட பாசத்தை இந்தப் புதினம் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளது. கதையைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரான்சுநாட்டு வரலாற்றை விளக்கியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புரட்சிகள் பிரான்சுநாட்டில் நடைபெற்று மக்களை அலைக்கழித்தது. அதே நேரத்தில் மிகச்சிறந்த இலக்கியங்கள் உருவாயின. இந்நூற்றாண்டில் புனைவியம், நேரியம்(ரியலிசம்), குறியீட்டு இலக்கியம் என்ற மூவகை இலக்கிய இயக்கம் இருந்ததை மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டுள்ளார். எளிய நடையில் இந்தப் புதினம் அமைந்துள்ளது.நூல்: “தந்தை கோரியோ”

மொழிபெயர்ப்பாளர்: ச.மதனகல்யாணி

விலை:220-00
பக்கம்: 434
வெளியீட்டு ஆண்டு: 2012

கிடைக்குமிடம்: சாகித்ய அகாதெமி நிறுவனம்

2 கருத்துகள்:

Chellappa Yagyaswamy சொன்னது…

இந்த மொழிபெயர்ப்பு நூலை விரைவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். ‘செவாலியே’ சிவாஜி கணேசனைத் தெரியும். மதனகல்யாணி அவர்களும் ஒரு செவாலியே என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். அவர்களைப் பற்றி குறிப்பு தரக் கூடுமா?

Chellappa Yagyaswamy சொன்னது…

இந்த மொழிபெயர்ப்பு நூலை விரைவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். ‘செவாலியே’ சிவாஜி கணேசனைத் தெரியும். மதனகல்யாணி அவர்களும் ஒரு செவாலியே என்பது இப்போது தான் தெரிகிறது. அவர்களைப் பற்றி ஒரு குறிப்பு தரலாமே!