நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 3 மே, 2012

ஈகி தென்னவராயன்பட்டு இரா.வேணுகோபால்சாமி(22.11.1911- 25.01.1984) நூற்றாண்டுவிழாவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள ஊர் தென்னவராயன்பட்டு என்பதாகும். இங்கு வாழ்ந்த திரு.இராமசாமிக் கண்டர், பரிபூரணம் அம்மையாருக்கு மகனாக வாய்த்தவர் இரா.வேணுகோபால்சாமி ஆவார். ஆசிரியர் பணியாற்றியவர், விக்கிரவாண்டி ஒன்றியத்தின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தவர். பல்வேறு சமூக நற்பணி இயக்கங்களில் இணைந்து தொண்டுசெய்தவர். அரசியல் ஈடுபாடுகொண்டவர். இவர்தம் மகன் தெ.சஞ்சீவிராயன் ஆவார். இவர் பணிநிறைவுபெற்ற ஆசிரியர்களுக்கான அமைப்பை நிறுவிப் பணியாற்றி வருகின்றார். தம் தந்தையாரின் நினைவைப்போற்றும் வகையில் குடும்பத்தாருடன் இணைந்து தந்தையாருக்கு நூற்றாண்டு விழாவையும், “முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்” என்ற நூல்வெளியீட்டு விழாவையும் நடத்துகின்றார். பேராசிரியர் த.பழமலை ஏற்பாட்டில் நடக்கும் நூல்வெளியீடு, நூற்றாண்டுவிழாவில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


இடம்: செயசக்தி திருமண மண்டபம்,(ரெட்டியார்மில்), கிழக்குப் புதுச்சேரி சாலை,விழுப்புரம்,

நாள்:12.05.2012(சனிக்கிழமை) நேரம்; காலை 10 மணி

விழாத்தலைமை: வே.ஆனைமுத்து

வரவேற்பு ஆசிரியமாமணி தெ.வே.சஞ்சீவராயன்

முன்னிலை: செஞ்சி ந.இராமச்சந்திரன், முனைவர் க.பொன்முடி, மருத்துவர் இராமதாசு, கு.இராதாமணி, மு.சீத்தாராமன்

ஈகி இரா.வேணுகோபால்சாமி படத்திறப்பு: வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்

“முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்” நூல்வெளியீடு:
புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள்

பாராட்டுரை:

எஸ்.ஜெகத்ரட்சகன்(மத்திய அமைச்சர்)
வ.சபாபதி (புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்)
தி.ப.இ,ஆ.செல்வம் (புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத்தலைவர்)
கல்வியாளர் சாமிக்கண்ணு.
பேராசிரியர் த.பழமலை
பனப்பாக்கம் கு.சீத்தா.
பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா,
கு.இறைவன்,
ந.இறைவன்(ஆசிரியர், அச்சமில்லை)
புலவர் கி.த.பச்சையப்பன்,
புலவர் நாகி.
புலவர் சீனு.இராமச்சந்திரன்,
இயக்குநர் வ.கௌதமன்,
சொல்லாய்வுச்செல்வர் சு.வேல்முருகன்

உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்குவர்.

5 கருத்துகள்:

PORKO சொன்னது…

Ungal tamilthondu vazhka valarga-

PORKO சொன்னது…

Ungal Tamil Thondu Vazhka Valarka

PORKO சொன்னது…

Ungal Tamizh Thondu Vazhka Valarka

vinayagamurthy சொன்னது…

oru samuthaya sirppiyai ulakirkku arimugam seithamaikku nantri.

vinayagamurthy சொன்னது…

oru samuthaya sirpiyai ulakirku arimugam seithamaikku nantri.