நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 மே, 2011

குடியரசுத்தலைவரின் செம்மொழி விருது - படங்கள்


ந்தியக் குடியரசுத்தலைவர்

மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம்
முனைவர் மு.இளங்கோவன்
செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)


புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் புதுதில்லியில் இன்று(06.05.2011) காலை 11 .30 மணிக்கு நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறறார். முனைவர் மு.இளங்கோவன் தமிழின் பழந்தமிழ் இலக்கிய,இலக்கணங்களில் ஆய்வுசெய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பள்ளது.

மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர். வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. விருதுத்தொகை ஒரு இலட்சமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. விருதுபெற்றதும் இன்று மாலையில் தில்லித் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட விருதுபெற்ற அறிஞர்களுக்கு நடைபெறும் பாராட்டுவிழாவிலும் இவர் கலந்துகொள்கின்றார்.


குடியரசுத்தலைவரிடம் செம்மொழி விருது பெற்ற தமிழகத்து அறிஞர்கள்(நாள்: 06.05.2011)


இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)



இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்! தமிழால் உங்களுக்கும் உங்களால் தமிழுக்கும் பெருமை! தொடரட்டும் உங்களின் தமிழாய்வு.

சாகம்பரி சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா, தமிழ் போல நீவீர் என்றும் இனிமையுடன் வாழ்க பல்லாண்டு.

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் முனைவர் ஐயா.

Senthil Kumar Devan சொன்னது…

SIR, AWESOME.. HATS OFF TO YOU

மணிச்சுடர் சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். இந்தியக் குடியரசுத் தலைவரிடம் செம்மொழி இளம் அறிஞர் விருதினைப் பெற்றமைக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புhவலர் பொன்.கருப்பையா.புதுகை

Ravichandran Somu சொன்னது…

மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துகள்....

ராஜ்மோகன் சொன்னது…

தாங்கள் இது போன்ற மேலும் பல விருதுகளைப்பெற வாழ்த்துக்கள் ஐயா.

ராஜ்மோகன் சொன்னது…

தாங்கள் இது போன்ற மேலும் பல விருதுகளைப்பெற வாழ்த்துக்கள் ஐயா.

ராஜ்மோகன் சொன்னது…

தாங்கள் இது போன்ற மேலும் பல விருதுகளைப்பெற வாழ்த்துக்கள் ஐயா.

Murugeswari Rajavel சொன்னது…

வாழ்த்துக்கள்!உங்களின் பணி மென்மேலும் வளர்க!!

Murugeswari Rajavel சொன்னது…

வாழ்த்துக்கள்!உங்களின் பணி மென்மேலும் வளர்க!!

Pattbi சொன்னது…

Dear Dr.MU.Elango!
I am very very happy to see that you are rightly honoured. Few years back I wrote you that the future of TAMIL is in the safe hands of young professors like Dr.MU.EL. I also told you that you are one of the pillars of Tamil. Now I see that my words are proved right!
Professor K.Pattabiraman, Vellore, Cell: 9600690450

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி! இனிய வாழ்த்துக்கள் மு.இ ஐயா! :)
புதுவை பாரதிதாசன் கல்லூரியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்!

cooperator சொன்னது…

My Dear Thampi Dr.Mu.Elangovan,
Greetings from Gods Own Country,
As a person continuously observing you for the past 22 years, I am very much delighted to see the picture which depicts the award that is bestowed upon you by the first citizen of our nation. I deem it as it’s only a beginning for your many feathers to your cap. Let your efforts bring all that you aspire.
Dr.G.Veerakumaran, Kerala Agricultural University, Thrissur

ஏழுமலை சொன்னது…

super

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா! வாழ்த்துகள் கோடி. மிக்க மகிழ்ச்சி.தாங்கள் இது போல் பற்பல விருதுகள் பெற பிரார்த்திக்கிறேன்.