நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஜூலை, 2009

இதழ்களில் நம் முயற்சிக்குப் பாராட்டுகள்...

அன்பு நண்பர்களே!
தமிழ் இணையப் பரவலுக்கு நண்பர்கள் பலரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்து யான் பயிற்சியளித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த முயற்சியை அண்மைக்காலமாக இதழியல் துறை சார்ந்த நண்பர்கள் தங்கள் இதழ்களில் வெளிப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழகம் முழுவதும் மேலும் பல பயிலரங்குகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.பாராட்டி ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அமுதசுரபி ஏட்டில் அதன் ஆசிரியர் அண்ணன் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்கள் நல்ல வகையில் படத்துடன் செய்தி வெளியிட்டார்கள்(சூன்,2009).

அதுபோல் இந்த மாதம்(சூலை,2009) அம்ருதா இதழின் சிறப்பாசிரியர் அம்மா திலகவதி அவர்கள் படத்துடன் செய்தி வெளியிட்டுத் தமிழுலகத்துக்கு என் முயற்சியை அறிவித்துள்ளார்கள்.

இந்தக் கிழமை வெளியான தமிழக அரசியல் என்ற கிழமை இதழில் என் முயற்சியை ஊக்கப்படுத்தி திரு.வெங்கடேசு என்ற செய்தியாளர் வழியாக மிகச்சிறப்பாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.இந்த இதழைக் கண்ணுற்ற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொலைபேசியில் நண்பர்கள் அழைத்து வாழ்த்துச்சொன்னார்கள்.பல இடங்களில் தமிழ் இணையப்பயிலரங்குகள் நடத்த ஆர்வமாக உள்ளதைத் தெரிவித்தனர்.

அனைவருக்கும் நன்றி
(ஆயிரக்கணக்கான படங்களையும்,பக்கங்களையும் இணையத்துக்கு ஏற்ற உதவிய என் மின்வருடி(scanner) திடீரெனச் செயலிழந்துவிட்டது.இனி புதியதுதான் வாங்கவேண்டும் என்று பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் மின்வருடி மேற்கண்ட செய்திகளை உங்கள் பார்வைக்கு வைக்கமுடியாமல் போனது.புதிய கருவி வாங்கிய பிறகு என் பணிகள் வழக்கம்போல் தொடரும்)

3 கருத்துகள்:

செல்வா சொன்னது…

முனைவர் இளங்கோவன்,

பாராட்டுகள். நீங்கள் ஊக்கம் உற்றால் அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றமாய் அமையும். நற்பணிகள் தொடரவும், நற்பயன் பெருகவும் நல்வாழ்த்துகள்.

ரவிசங்கர் சொன்னது…

வாழ்த்துகள்.

Nilavan சொன்னது…

தாங்களின் அரும்பணிகள் மேலும் தொடந்து தமிழிணையம் தரணியாண்டிட வாழ்த்தும் வரவேற்பும்.

வாழ்க தமிழுடன்,
தமிழ் நிலவன்.