நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 10 ஜூன், 2024

ஓலைச்சுவடிகள் ஆய்வறிஞர் முனைவர் மோ. கோ. கோவைமணி

 

முனைவர் மோகோ. கோவைமணி 

[முனைவர் மோ. கோ. கோவைமணி அவர்கள் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழகப் பதிவாளர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். இவர்தம் ஊர் திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்பேட்டை என்பதாகும். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். “பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள்” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம்பெற்றவர். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், படித்தல், ஆராய்ச்சி செய்தல், மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல்  முதலிய பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்] 

’தமிழ்நாட்டின் வடவெல்லைத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் ஆசிரியர் மங்கலங்கிழார்அவர்களின் மாணவரும் வடவெல்லைப் போராட்டத் தியாகியுமான ஆசிரியர் மோ. கு. கோதண்ட முதலியார்தெய்வானையம்மாள் ஆகியோரின் மகனாக 03.06.1963 இல் கோவைமணி அவர்கள் பிறந்தவர்திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், இராமகிருஷ்ணராசு பேட்டையில் தனது தாய்வழிப் பாட்டனார் வீட்டில் பிறந்தவர்தான் பிறக்கும் முன்பே தனக்கு முன் பிறந்த தமக்கையை இழந்து,  இரண்டாவதாகப் பிறந்தவர். தனக்குப் பின் ஒரு இளவலும், மூன்று தங்கைகளையும் கொண்டவர்

பள்ளிக் கல்வி 

கோவைமணி அவர்கள் தொடக்கத்தில் கோபால் என்ற பெயரோடு வழங்கப்பெற்றவர். தந்தை ஊரான பொதட்டூர்ப்பேட்டை அரசினர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கும்போது கோவைமணி என்றானார்உயர்நிலைப் பள்ளி (1978) மற்றும் மேனிலைப் பள்ளி (1980)க் கல்வியைப் பொதட்டூர்ப் பேட்டையிலேயே பயின்றவர்உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிக் கல்வி பயிலும் போதே தன்னுடைய குலத்தொழிலான கைத்தறியில் நெசவுத் தொழிலைச் செய்து பொருளீட்டிக் குடும்பப் பொறுப்போடு வாழ்ந்தவர்

இளமைக்காலத்தில் பள்ளிக் கல்வியோடு படைப்பு-நடிப்பு ஆகிய திறன்களிலும் வல்லவராக விளங்கினார்தான் படித்த பள்ளியின் ஆண்டு விழாவில் தானே மன்னிப்பது தவறு என்ற சிறுவர் நாடகத்தை எழுதி நண்பர்களோடு நடித்திருக்கிறார். சென்னை வானொலி-சிறுவர் பூங்கா பகுதிக்குக் குழந்தை நாடகங்களை எழுதி அனுப்ப, ஒரு கட்டத்தில் வானொலி இயக்குநர் கூத்தபிரான் அவர்கள் நேரில் அழைத்துப் பேசி, முதலில் படி, பிறகு படைப்புத்தொழிலில் ஈடுபடலாம் என்று கூறி அனுப்ப, தன்னுடைய படைப்புக்களை ஏட்டிலேயே வைத்துக் கொண்டவர்இந்நிலையில், பதினெட்டுச் சிறுகதைகள், இரண்டு நாவல்கள், நான்கு நாடகங்கள், இரண்டு கதைக்கவிதைகள், ஒரு பயணக்கதை, 200க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள், 100க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகள் அடங்கும்.  

மேனிலைக் கல்வி பயின்ற காலத்தில் ஜோதி என்ற கையெழுத்து காலாண்டு இதழ் ஒன்றைத் தொடங்கி மூன்றாண்டுகள் அதன் ஆசிரியராக இருந்து சிறப்பாக நடத்தியவர்இந்தக் கால கட்டத்தில் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் பள்ளி விடுமுறை நாள்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தியவர்

கல்லூரிக் கல்வி 

மேனிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தும் ஏழ்மையின் காரணமாக அப்படிப்பில் சேர முடியாமல், தந்தையார் கைக்கடிகாரம் பழுதுபார்க்கும் பட்டய வகுப்பில் சென்னை-கிண்டி தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்க்க, அதில் விருப்பம் இல்லாமல் மறுநாளே சான்றிதழ்களைத் திரும்பப் பெற்று வீடு வந்து தந்தையாரின் வெறுப்புக்கு ஆளானவர். இதனால் தனித்து விடப்பட, தனது சிற்றப்பா மோ.கு. சொக்கலிங்க முதலியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தனியாக ஓராண்டு நெசவுத்தொழிலை மேற்கொண்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, தந்தையின் ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல் (தமிழ் வழியில்) (1981-1984) பயின்றவர்இக்கால கட்டத்தில் இளநிலை ஆங்கிலத் தட்டச்சு (மே 1982), முதுநிலை ஆங்கிலத் தட்டச்சு (நவம்பர் 1983), இளநிலைத் தமிழ்த் தட்டச்சு (மே 1984), முதுநிலைத் தமிழ்த் தட்டச்சு (ஜுன் 1986) ஆகிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களைப் பெற்றவர்

தமிழ் மீது இவருக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் (1984-1986) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (1986-1987) பட்டங்களை (அமுதபாரதியின் கவிதைகள் - ஐக்கூ)ப் பெற்றவர். இக்கால கட்டத்தில் ஓவியக் கவிஞர் அமுதபாரதியின் அறிமுகம் கிடைக்க, கவிதா மண்டலம் மாத இதழில் 300க்கும் மேற்பட்ட ஐக்கூக் கவிதைகளை வெளியிட்டவர்

தமிழ் மட்டுமே படித்து இருப்பதைவிட அதில் சிறப்புத் தகுதி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவருக்குத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் 1988 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற 40 நாள்கள் சுவடிப் பயிற்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது. இப்பயிற்சியில் கலந்துகொண்டு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்இப்பயிற்சிக்குப் பிறகு சுவடியியலே தனக்கான துறை எனத் தேர்வு செய்கிறார். 

சுவடிப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் .கோ. பரமசிவம் அவர்கள் இவருடைய சுவடி ஆர்வத்தைக் கண்டு துணைவேந்தர் . அகத்தியலிங்கனாரிடம் பரிந்துரைசெய்து, அவர்களால் 1988இல் பணியமர்த்தம் செய்யும் ஆணை கிடைக்கப்பெற்றவர்ஆனால், இவர் அவ்வாணையை ஏற்றாலும், தன்னுடைய சுவடித் தகுதியை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகச் சொல்லி, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பூ. சுப்பிரமணியம் அவர்களிடம் சுவடியியல் பட்டயம் 1988-1989இல் (நாடி மருத்துவம்) சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றார்

திருவாவடுதுறு ஆதினத்தின் மூலம் 2000 இல் சித்தாந்த இரத்தினம் பட்டயமும், தமிழ்ப் பல்கலைக்கழக கணிப்பொறி அறிவியல் துறையின் மூலம் 2004 இல் அடிப்படை கணிப்பொறி அறிவியல் பட்டயமும் பெற்றவர்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் . கடிகாசலம் அவர்களின் நெறிகாட்டுதலின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பயில பதிவு செய்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியின் காரணமாக இம்முனைவர்ப் பட்டப் பதிவினை நீக்கம்  செய்து தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் பேராசிரியர் .கோ. பரமசிவம் அவர்களின் நெறிகாட்டுதலின் கீழ் பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள் என்னும் பொருண்மையில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு 2003இல் முனைவர்ப் பட்டம் பெற்றவர்இவ்வாய்வேடு 1897 முதல் இதழ்களில் வெளிவந்த 867 சுவடிப் பதிப்புகளை வெளிக்காட்டி தமிழ் இலக்கிய வரலாற்றின் பரப்பை விரிவடையச் செய்யும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறதுஇதன் சிறப்பினை உணர்ந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் இம்முனைவர் பட்ட ஆய்வேடு பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு என்ற பொருண்மையில் 2010 உலகச் செம்மொழி மாநாட்டு வெளியீடாக வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது

பணி 

1988-1989இல் சுவடியியல் பட்டயம் பயின்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுத் தகைமையராக தேர்வு செய்யப்பெற, மறுநாள் பணியில் சேர வரும்போது, பணியாணை வேறொருவருக்கு மாற்றப்பட்டது. நிலமையறிந்து வருந்திய இவரிடம் நிறுவன இயக்குநர் பேராசிரியர் .. திருநாவுக்கரசு அவர்கள்நீ தமிழ்ப் பல்கலைக்கழகம் செல்கஎன நெறிப்படுத்தினார். 18.09.1989 இல் ஓலைச்சுவடித்துறையில் திட்ட உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர்அதுமுதல் 01.03.1990இல் ஆய்வு உதவியாளராகவும் (தொகுப்பூதியம்), 04.06.1992 முதல் 24.06.2007வரை ஆய்வு உதவியாளர் (ஊதிய நிரக்கு), 25.6.2007 முதல் 24.06.2015வரை உதவிப் பேராசிரியராகவும், 25.06.2015 முதல் 24.06.2018வரை இணைப்பேராசிரியராகவும், 25.06.2018 முதல் 30.06.2023வரை பேராசிரியராகவும் என ஓலைச்சுவடித் துறையில் பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றி 30.06.2023இல் பணி ஓய்வு பெற்றவர்

பேராசிரியர் கோ. பரமசிவம் அவர்களின் வேண்டுகோளின்படி ஓலைச்சுவடித் துறையின் வளர்ச்சியே தன்னுடைய வளர்ச்சியாகப் பயணித்து, ஓலைச்சுவடித்துறையை உலக அளவில் உயர்த்தியவர்

பொறுப்புகள் 

  1. பதிவாளர் (பொ.), தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர், 09.07.2021 முதல் 24.12.2021.
  2. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் , 14.06.2022 முதல் 07.06.2023.
  3. தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைத் தலைவராக 01.07.2012 முதல் 21.03.2023 வரை

உறுப்பினர் 

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர் மற்றும் தலைவராக 05.12.2005 முதல் 2022 மார்ச்சு வரை.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் செயற்குழு உறுப்பினராகவும் (2007-2013), தலைவராகவும் (2013-2015).

SAP உறுப்பினர் (2015-2020), சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.

Chairperson (Tamil), AIIA, CCIM, New Delhi.

பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2021-23), TNPSC Group 1 and 2, Chennai.

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையின் பாடத்திட்டக் குழு தலைவர் மற்றும் கூட்டுநர் (01.07.2012-25.03.2023).

தமிழ்ப் பல்கலைக்கழக நீரகழாய்வு மையப் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (20.02.2007 முதல் 19.02.2010).

தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்துச் சுவடித்துறை பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2015-2023). 

தேர்வாளர்

அழகப்பா பல்கலைக்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்றவற்றின் 23 முனைவர்ப் பட்டத்திற்குப் புறநிலைத் தேர்வாளர்




நூல்கள்

1.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 6 (தொகுப்), 1992.

2.            உதயத்தூர் புலைமாடத்திவரத்து (சுவடிப் பதிப்பு), தமிழ்க்கலை, 1994.

3.            இந்திய காலக்கணிதம், 1997.

4.            சித்த மருத்துவத்தில் நாடி, 1997.

5.            வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆ. மாலை,தொ. 1 பதிப்.), 1998.

6.            வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆ. மாலை தொ. 2 (பதிப்.), 1998.

7.            குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 1 (பதிப்.), 1999.

8.            குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 2 (பதிப்.), 1999.

9.            குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 3 (பதிப்.), 1999.

10.          ஐக்கூ ஐநூறு, 1999.

11.          தமிழும் விசைப்பலகையும், 2000.

12.          சுவடியியல், 2006.

13.          எண்ணும் எழுத்தும், 2006.

14.      பேராசிரியர் முனைவர் .கோ. பரமசிவம் மோட்சதீப வழிபாட்டு மலர், 2006.

15.          முருகன் இலக்கிய ஆய்வு மாலை - தொகுதி 1 (பதிப்.), 2007.

16.          முருகன் இலக்கிய ஆய்வு மாலை - தொகுதி 2 (பதிப்.), 2007.

17.          இதழ்ப் பதிப்பு வரலாற்றில் இதழ்கள், 2008.

18.          தமிழ்ச் சுவடிப்பதிப்பு வரலாற்றில் இதழ்களின் பங்கு, 2008.

19.          தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 7 (பதிப்.), 2010.

20.          தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 8 (பதிப்.), 2010.

21.          பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, 2010.

22.          பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள், 2010.

23.          பருவ இதழ்ச் சுவடிப் பதிப்புகள், 2010.

24.          களப்பணிஅறிக்கை, 2011.

25.          உயர்வுள்ளல் (தமிழியல் கட்டுரைகள்), 2011.

26.          திருக்குறள் ஆய்வுமாலை (பதிப்.), 2013.

27.          செம்புலப் பெயல்நீர் (ஐக்கூக் கவிதை), 2013.

28.          புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, 2013.

29.          நாடி மருத்துவம் (சுவடிப்பதிப்பு), 2013.

30.          பதிப்புலகத் தூண்கள், 2013.

31.          ஓலைச்சுவடியியல், 2013 (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

32.          தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி, 2013.

33.          செவ்வியல் தமிழ்ச்சுவடிகள், 2014.

34.          தமிழில் கதைப்பாடல் சுவடிகள், 2016.

35.          இதழ்ப் பதிப்பு நூல்கள், 2017.

36.          ஆத்திசூடித் திறவுகோல், 2017.

37.          கனா நூல், 2017.

38.          கனவு நூல், 2017.

39.          குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை, 2017.

40.          குருபரம்பரை அகவல், 2017.

41.          திருத்தொண்டர் மாலை, 2017.

42.          திருப்புல்லாணித் திருவனந்தல், 2017.

43.          பழனிமலை வடிவேலர் பதிகம், 2017.

44.          அணிமுருகாற்றுப்படை - 1, 2017.

45.          அருள் முருகாற்றுப்படை – 1, 2017.

46.          அணிமுருகாற்றுப்படை – 2, 2017.

47.          அருள் முருகாற்றுப்படை – 2, 2017.

48.          வருமுருகாற்றுப்படை – 1, 2017.

49.          வருமுருகாற்றுப்படை – 2, 2017.

50.          வருமுருகாற்றுப்படை – 3, 2017.

51.          பொருண் முருகாற்றுப்படை, 2017.

52.          பொருள் முருகாற்றுப்படை, 2017.

53.          இயல் முருகாற்றுப்படை, 2017.

54.          ஒரு முருகாற்றுப்படை, 2017.

55.          சேய் முருகாற்றுப்படை, 2017.

56.          வேல் முருகாற்றுப்படை, 2017.

57.          எட்டுத்தொகை நூல்களில் பாடவேறுபாடுகள், 2017.

58.          முருக இலக்கிய ஆய்வுக்கோவை-தொகுதி 1, 2018.

59.          முருக இலக்கிய ஆய்வுக்கோவை-தொகுதி 2, 2018.

60.          மகாகவி பாரதியார் ஆய்வுக்கோவை, 2022.

61.          ஓலைச்சுவடியியல், 2022.

62.          இந்தியக் காலவியல், 2022. 

தொலைநிலைக் கல்விப் பாட நூல்கள் 

சுவடியியல் (ஆய்வியல் நிறைஞர் பாடம்), 2006 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

சுவடியியல் அறிமுகம், சுவடியியல் பட்டயம் தாள் 1, 2013 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

சுவடிப் பாதுகாப்பு, சுவடியியல் பட்டயம் தாள் 3, 2013 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

சுவடிப்பதிப்பு முறைகள், சுவடியியல் பட்டயம் தாள் 2, 2013 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

சுவடியியல், சுவடியியல் சான்றிதழ், தாள் 1, 2014 (தமிழ்ப் பல்கலைக்கழகம்).

சுவடிப் பாதுகாப்பும் பதிப்பும், சுவடியியல் சான்றிதழ், தாள் 2, 2014.

அற இலக்கியம், 2019 (அழகப்பா பல்கலைக்கழகம்).

இக்கால இலக்கியம், 2019 (அழகப்பா பல்கலைக்கழகம்).

நாட்டுப்புறவியல், 2019 (அழகப்பா பல்கலைக்கழகம்).

ஆராய்ச்சி அறிமுகம், 2020 (அழகப்பா பல்கலைக்கழகம்).

தமிழ் ஓலைச்சுவடியியல்அறிமுகம், 2022 (திறந்த நிலை பல்கலைக்கழகம், இலங்கை). 

தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட உள்ள நூல்கள் 

1.            தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை

2.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 9

3.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 10

4.    கதைப்பாடல்கள் மூன்று (சின்னத்தம்பி கதை, சிறுத்தொண்டன் கதை,    புலைமாடத்தி வரத்து) – சுவடிப்பதிப்பு.

5.            தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சுவடிகள் அட்டவணை

6.            திரிகடும் மூலமும் நாட்டார் உரையும் - பதிப்பும் ஆய்வும்

7.            நாச்சியாரம்மன் கதை - சுவடிப்பதிப்பும்

8.            தமிழ் நாவலர் சரிதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும்

9.            முத்துமாலையம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும் 

ஒலிப்பாட நூல் 

1.            அற இலக்கியம், 2020 (அழகப்பா பல்கலைக்கழகம்).

2.            நாட்டுப்புறவியல், 2020 (அழகப்பா பல்கலைக்கழகம்).

3.            இக்கால இலக்கியம், 2020 (அழகப்பா பல்கலைக்கழகம்).

4.            ஆராய்ச்சி அறிமுகம், 2020 (அழகப்பா பல்கலைக்கழகம்). 

ஒளி-ஒலிப் பாட நூல்

1.            சுவடியியல், 2020 (தமிழ்ப் பல்கலைக்கழகம்

ஆய்வேடுகள் 

1.   அமுதபாரதியின் கவிதைகள் - ஓர் ஆய்வு (ஐக்கூ),  ஆய்வேடு, 1987.

2.            நாடி மருத்துவம், சுவடியியல் பட்டய ஆய்வேடு, 1989.

3.            பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள், முனைவர் பட்ட ஆய்வேடு, 2002.

முடிக்கப்பெற்ற ஆய்வுத் திட்டங்கள்

1.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 6, 1989-90.

2.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 7, 1991-93.

3.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 8, 1994-96.

4.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 9, 2008-09.

5.            தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, 2008.

6.            தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 10, 2009-10.

7.    கதைப்பாடல்கள் மூன்று (சின்னத்தம்பி கதை, சிறுத்தொண்டன் கதை, புலைமாடத்தி வரத்து) - சுவடிப்பதிப்பு, 2010-11

8.            திரிகடுகம் மூலமும் நாட்டார் உரையும் - பதிப்பும் ஆய்வும், 2017-18.

12.          நாச்சியாரம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும், 2018-19.

13.          முத்துமாலையம்மன் கதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும், 2019-20.

14.          தமிழ் நாவலர் சரிதை - சுவடிப்பதிப்பும் ஆய்வும், 2016-17. 

திட்ட ஒருங்கிணைப்பாளர்

15. சுவடிகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர், புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம் (National Mission for Manuscripts), சுவடிகள் பாதுகாப்பு மையம் (Manuscript Conservation Centre), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 2018 முதல் ஜூன் 2023.

16.     EAP Project Co-ordinator, Digitization, Cataloguing and Preservation of Palmleaf Manuscripts in the Tamil University, Endangered Archives Programme (EAP), British Library, London, November 2019 to April 2023. 

ஆய்வுக் கட்டுரைகள் 

இதழ்கள் மற்றும் கருத்தரங்க மலர்களில் வெளிவந்த கட்டுரைகள் 316.

http:www.kovaimani-tamilmanuscriptology.blogspot.com என்னும் வலைதளத்தில் வெளிவந்த கட்டுரைகள் 179. 

ஆய்வு நெறியாளர் 

முனைவர்ப் பட்டம்  - 9

ஆய்வியல் நிறைஞர் பட்டம் – 43 

சுவடிப் பயிற்சி 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எளிமையான முறையில் சுவடியியல் பயிற்சி அளிக்கும் நிலையில் இதுவரை 70க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சுவடிப் பயிற்சி அளித்துள்ளார்

தமிழ்நாடு அரசு சுவடிகள் பாதுகாப்புக் குழுமத்தின் வாயிலாக தீநுண் காலத்தில் வாரந்தோறும் இணையவழியில் வாங்கசுவடி படிக்கலாம் என்ற நிகழ்வின் மூலம் 33 வாரங்கள் சுவடியியல் பயிற்சி அளித்துள்ளார்

இணைய உரை 

                தமிழியல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்த நிகழ்வுகளில் இணையவழியில் 49 உரைகள் நிகழ்த்தியுள்ளார். 

வலையொளி (You Tube)ப் பதிவுகள் 

                தனக்கான எழுத்தூசி -EZHUTHUSI வலையொளியில் – 157 பதிவுகள் வெளியிட்டுள்ளார்இவற்றில் சுவடிப்பாடம் 110,  சுவடிப் பயிற்சி 36, சுவடித்தேன் 11 என அமையும்

இணையத்தில் வகுப்பு எடுத்தல் 

மொழிகள் கற்கைகள் துறை, மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட, இலங்கை மாணவர்களுக்கு தமிழ் ஓலைச்சுவடியியல்அறிமுகம் மற்றும் தமிழ்க் கல்வெட்டியல் அறிமுகம் ஆகிய பாடங்களை இணைய வகுப்பு எடுத்தல்

சுவடிகள் திரட்டுதல் மின்னணுவாக்கம்  செய்தல் 

செங்கற்பட்டு ஆவணச் சுவடிகள், தஞ்சாவூர் ஆவணச் சுவடிகள், நாகப்பட்டினம் ஆவணச் சுவடிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆவணச் சுவடிகள், செங்கோட்டை ஆவணச் சுவடிகள் என 1000க்கும் மேற்பட்ட ஆவணச் சுருணைகள் பணியில் சேர்ந்த 18.09.1989 முதல் பல்வேறு கால கட்டங்களில் திரட்டப்பெற்று ஓலைச்சுவடித்துறையில் சேர்ப்பிக்கப் பெற்றுள்ளன

பணியில் சேர்ந்த 18.09.1989 முதல் இலக்கண இலக்கியம், மருத்துவம், சோதிடம் போன்ற பல பொருண்மைகளிலான ஏறக்குறைய 2500க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிக் கட்டுகள் பல்வேறு கால கட்டங்களில் திரட்டப்பெற்று ஓலைச்சுவடித்துறையில் சேர்ப்பிக்கப் பெற்றுள்ளன

ஓலைச்சுவடிகளை மின்னணுப்பதிவாக்கம் செய்தல்

1. 2009-10ஆம் ஆண்டு தமிழக அரசின் பகுதி 2 திட்டத்தில் 2700 சுவடிகள் மின்னணுப்பதிவாக்கம் செய்துள்ளார்.

3.  Digitization, Cataloguing and Preservation of Palmleaf Manuscripts in  the Tamil University என்ற திட்டத்திற்காக Endangered Archives Programme (EAP), British Library, London நிதியில் தமிழ்ப் பல்கலைக்கழக 3000 தமிழ் ஓலைச்சுவடிகள் உலகத் தரத்துடன் மின்னணுப் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.





வலப்பதிவில் கட்டுரைகள், படைப்புகள் (Blogs)

பின்வரும் வலைப்பதிவுகளில் கட்டுரைகள், கோவைக்குறள், கோவைக் கவி, கோவை மனம், கோவைச் சூடி, கோவை ஊற்று, கோவைக் கனி, கோவைப் பூ, கோவைப் பா போன்ற படைப்புகள் வெளியிடப்பெறுகின்றன. 

http://kovaimani-tamilmanuscriptology.blogspot.com

http://kovai-k-kural.blogspot.com

http://kovai-k-kavi.blogspot.com

http://kovaimanam.blogspot.com

http://kovai-c-chudi.blogspot.com

http://kovai-urttru.blogspot.com

http://kovai-k-kani.blogspot.com

http://kovai-p-poo.blogspot.com

http://kovai-p-paa.blogspot.com

 

 

 

கருத்துகள் இல்லை: