நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 ஜனவரி, 2022

ஈராயிரம் ஆண்டு வரலாற்றைச் சுமந்து நிற்கும் செய்திப் பலகை…

 

  புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச்  செல்லும்பொழுது கடப்பாக்கம் ஊருக்கு முன்பாக நல்லூர் என்னும் ஊருக்குச் செல்லும் சிறு பாதை பிரியும் (புதுவையிலிருந்து 44 கி. மீ). அவ்விடத்தில் சாலையின் வலப்புறத்தில் இப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்த ஊரையும் அவ்வூர் இடைக்கழிநாடு என்னும் பகுதியுள் அடங்கியிருந்தது என்பதையும் தாங்கிய செய்திப்பலகையாக இஃது உள்ளது. சங்க இலக்கியங்கள் யாவும் புனைவு அல்ல. வரலாற்றைத் தாங்கியுள்ள ஆவணங்கள் என்பதற்கு இச்சான்று ஒன்றே போதும்.

கருத்துகள் இல்லை: