நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 நவம்பர், 2020

அச்சுக்கு வராத ஆய்வுக்குறிப்புகள்!

 

                  திரு. நா. முத்து அவர்களின் கையெழுத்தில் அமைந்த மடல்.


  பொன்னி என்னும் இலக்கிய இதழ் 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தமையைத் தமிழ் ஆர்வலர்கள் நன்கு அறிவார்கள். அந்த இதழின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிய, அவ்விதழில் அச்சுப்பணியில் முன்னின்று உழைத்த திருவாளர் நா. முத்து ஐயாவிடம் மடல் வழியாகச் சில விவரங்கள் வேண்டியிருந்தேன். 1996 இல் என் முனைவர் பட்ட ஆய்வேட்டை நிறைவு செய்து பல்கலைக்கழகத்திற்கு வழங்கினேன். 1997 இல் பட்டமும் பெற்றேன். ஆயின், குடந்தையை அடுத்த சாக்கோட்டையில் தம் மகள் இல்லத்தில் வாழ்ந்த எண்பது அகவை நிறைவுற்றிருந்த திரு. முத்து ஐயா அவர்கள், 02.08.2003 இல் எழுதிய குறிப்பினை 09.03.2004 நாளிட்ட மடலில் எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த 16 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக இருந்த 15 பக்க மடலின் ஒரு பக்கத்தை நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கின்றேன். இம்முழு மடலும் அரிய பல குறிப்புகளைத் தருகின்றன. விரைந்து முழு மடலையும் பதிவிடுவேன்.

  திரு. நா. முத்து ஐயா அவர்கள் என் ஆய்வுக்குச் செய்த உதவியை “எழுமை எழுபிறப்பும்” நினைவேன்.

கருத்துகள் இல்லை: