நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 14 ஜூலை, 2017

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !திருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, திருக்குறள் தொண்டும், தமிழ்த்தொண்டும் செய்து, பிறவிப்பெருங்கடல் நீந்திய, பெரும்புலவர் .வே.இராமசாமியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் நூலினைத் தமிழார்வலர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் 16.07.2017 (ஞாயிறு) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை நடைபெற உள்ளது.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெறும் விழாவில் இராம. திருவள்ளுவன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருக்குறள் மாமணி திரு. . வே. இரா.  நூலினையும், சிறப்பு மலரினையும் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுச் சிறப்புரையாற்ற உள்ளார்.

நூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், மு. தமிழ்மாறன், இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.. புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் நூலினை அறிமுகம் செய்து, திறனாய்வுரையாற்ற உள்ளார். நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி ஏற்புரையாற்றவும், கி. நந்தகுமார். நன்றியுரையாற்றவும் உள்ளனர்.

தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரைகளைச் செவிமடுக்க, வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை: