நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T.H)...

மக்கள் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக உள்ளது.இத்தொலைக்காட்சியில் திரைப்படம் தவிர்ந்த, தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தமிழ்க்கூடல், சொல்விளையாட்டு, செய்திகள், வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகள்,பயனுடைய பொழுதுபோக்குகள்,மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகி உலக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.

கம்பி வசதி இல்லாதவர்களும்,பிற தொலைக்காட்சிகளைப் பார்க்க விரும்பாதவர்களும் பயன்பெறும் வண்ணம் செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு நல்கும் வகையில்(D.T.H) வழியாக மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவின் எந்த ஊரிலிருந்தும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இனி மக்கள் கண்டு மகிழலாம்.மாத வாடகை இல்லாமல் தொடக்கத்தில் ஆகும் செலவுடன் நிகழ்ச்சிகளைக் காணலாம். 1500 உரூவாவிலிருந்து 2500 உரூவா வரை முதற்கட்ட செலவு செய்தால் மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட சில தமிழ் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழலாம்.மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். தமிழர்களாக வாழ்வோம். பிறநாட்டினரின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்.

கருத்துகள் இல்லை: