நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 அக்டோபர், 2007

தமிழ் இசைக்கான பல்கலைக்கழகம் வேண்டும்.மருத்துவர் ச.இராமதாசின் விருப்பம் சரியானதே!

உளியின் ஓசை நூல்வெளியீட்டு விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இசைப்பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள்.அவ்வாறு உருவாக்கப்படும்
பல்கலைக்கழகம் தமிழ் இசைப்பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும் என மருத்துவர்
ச.இராமதாசு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏனெனில் தமிழிசை என்ற பெயரில்
தெலுங்கிசை இங்குக் கோலோச்சுவதை மனதில் வைத்தே பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம் கண்ட மருத்துவர் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்.தமிழிசையை மீட்க அண்ணாமலை
அரசர்,கல்கி முதலானவர்களின் பணிகளைக் கலைஞர் நன்கு அறிவார்.எனவே தமிழறிவும்,இசையறிவும்,தமிழ் உணர்வும்,பல்கலைக்கழகம் உருவாக்கும் ஆளுமையும்
கொண்ட ஒருவரின் தலைமையில் அமையும் குழு மிகச்சிறந்த திட்டமிட்டுக் கலைஞர்
அவர்களின் வாழ்நாள் சாதனையாக இப்பல்கலைக்கழகத்தை வடிவமைத்து உருவாக்கவேண்டும்.

2 கருத்துகள்:

பூச்சாண்டி சொன்னது…

ayya thotarndhu ezuthavum.

puranaanooru paatalgalaip patri

ezuthavum.

mikka nandri.

Dr Mu.Elangovan சொன்னது…

நன்றி ஐயா