தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பெரும் வணிக நிறுவனங்கள் திரைப்படம், பாடல், திரைப்பட நடிகர், நடிகைகளைப் பயன்படுத்திப் பல்வேறு வகைகளில் பண்பாட்டுச் சீரழிவுகளை நடத்தினர். இச்சூழலில் தமிழ் உணர்வாளர்கள் விரும்பிய வண்ணம் ஒரு தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி என்னும் பெயரில் மருத்துவர் இராமதாசு அவர்களால் உருவானதும் உலகத் தமிழர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். அதன் நிகழ்ச்சிகள் தரமானதாகவும், தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாலும், குடும்பத்துடன் பார்த்து மகிழும் வண்ணம் இருப்பதாலும் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆவலுடன் பார்த்துவருகின்றனர்.
தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா சென்னையில் நடைபெற உள்ளது.
இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18
நாள் : 06.09.2007
நேரம் : மாலை 4.00 மணி
கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு
பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு
இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு...
நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும், பொறுப்பாளர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகிறது. தொடக்கவிழாவில் நடுவண் தகவல் மற்றும் செய்திஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரியரஞ்சன்தாசு முன்சி, மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு கலந்துகொள்கின்றனர்.
தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி முதலானவர்களும் பழ.நெடுமாறன். எம்.கிருட்டிணசாமி, வரதராசன், இரா.நல்லகண்ணு, தொல். திருமாவளவன், காதர் மொய்தீன் முதலான அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள்.
தொடர்புக்கு
மின்னஞ்சல்: info@makkal.tv
இணையம் : www.makkal.tv
மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
1 கருத்து:
தாங்கள் ஓசை செல்லாவின் பின்னூட்டத்தில் தமிழ்மணத்தில் இணைப்பது தொடர்பான உதவி கேட்டிருந்தீர்கள் நண்பரே
இந்த கீழ்ககண்ட இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=linking_guidelines
கருத்துரையிடுக