நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#டைம்சு ஆப் இந்தியா #TIMES OF INDIA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#டைம்சு ஆப் இந்தியா #TIMES OF INDIA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 மே, 2025

டைம்சு ஆப் இந்தியா (TIMES OF INDIA) நாளேட்டில் பாரதிதாசன் பரம்பரை குறித்த கட்டுரை

           




       பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் என் முனைவர் பட்ட ஆய்வு நிறைவுற்றுச் சற்றொப்ப முப்பதாண்டுகள் ஆகின்றன. அவ்வாய்வின் விளைபயனாகப் பொன்னி என்னும் இலக்கிய இதழினைப் பல முனைகளில் ஆய்வுசெய்து, தமிழுலகுக்கு நினைவூட்டியுள்ளேன். அதன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியனாரின் நூற்றாண்டு விழாவாக இந்த ஆண்டு அமைகின்றது. 

    இந்நிலையில் அண்மையில் தமிழ்நாட்டரசு பாவேந்தரின் பிறந்தநாளையொட்டித் தமிழ்மொழி வாரம் அறிவிப்பினை வெளியிட்டுப் பாவேந்தர் பற்றாளர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவேந்தரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் இன்றைய(02.05.2025) TIMES OF INDIA நாளேட்டில் திரு. வினோத்குமார் அவர்கள் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் என்னையும் புலவர் செந்தலை ந. கவுதமனாரையும் நேர்கண்டு, அழகிய கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். 

    பாவேந்தர் பாரதிதாசனாரின் சிறப்புகளை நான் மாணவப்பருவத்தில் அறிந்துகொள்ள வாய்ப்பு நல்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், என் நெறியாளர் முனைவர் எழில்முதல்வன் அவர்களுக்கும் இன்றைய கட்டுரையாளர் திரு. வினோத்குமார் அவர்களுக்கும் நன்றியன்.