குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை உணர்ந்து, முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டுச் சுவைக்கும் வகையில் மணல்மேட்டு மழலைகள் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களை நூல்வடிவில் வெளியிட்டுள்ளார். புதுவை இசையறிஞர் கலைமாமணி கா. இராசமாணிக்கனார் அவர்களின் மேற்பார்வையில் இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்கள் இப்பாடல்களுக்கு இசையமைத்து ஒலிவட்டாக உருவம் கொடுத்துள்ளார். இந்த ஒலிவட்டினையும் நூலினையும் மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வெளியிட உள்ளார்கள். அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அழைப்பின் மகிழ்வில்
வயல்வெளித் திரைக்களம்
புதுச்சேரி – 605 003
நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி
இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம் அவர்கள்
தலைமை,
ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு
மாண்புமிகு பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள்
புதுச்சேரி சட்டப்பேரவை
ஒலிவட்டு முதல்படி பெறுதல்
திரு. கே.பி. கே. செல்வராஜ் அவர்கள்
தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்
நூல் முதல்படி பெறுதல்
புரவலர் திரு. ந. க. குணத்தொகையன் அவர்கள், புதுச்சேரி
அருளாசியுரை
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்
ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல்
முனைவர் வி. முத்து அவர்கள்
தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்
பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள்
தாளாளர்,
சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்
திரு. சோழன் குமார் வாண்டையார் அவர்கள்
பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்கள்
தலைவர், மெல்பர்ன் தமிழ்ச்சங்கம், ஆத்திரேலியா
பொறியாளர் ச. பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ்
சிங்கைக் கவிஞர் அ. இளங்கோவன் அவர்கள்
வாழ்த்துரை
பேராசிரியர் ப. சிவராசி,
இசுலாமியாக்
கல்லூரி, வாணியம்பாடி
ஒலிவட்டு அறிமுகவுரை
பொம்மலாட்டக்
கலைஞர் மு. கலைவாணன்
வரவேற்புரை
திரு. தூ. சடகோபன் அவர்கள்
நன்றியுரை
திரு. கோ. முருகன் அவர்கள்
புதுச்சேரி இலக்கிய வட்டம்