தமிழ் இணையப் பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணையப் பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 டிசம்பர், 2013
வியாழன், 12 டிசம்பர், 2013
தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
தஞ்சாவூரை
அடுத்த பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின்
சார்பில் 13.12.2013 (வெள்ளிக் கிழமை) காலை முதல் மாலை வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கோ.வெ.நடராசன் அவர்களும், துறைப்பேராசிரியர்களும்
மாணவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
கண்ணனூர் இமயம் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம்
மு.இளங்கோவன், திரு.அ.ஆண்டி(செயலர்), ப.பெரியண்ணன்(தலைவர்),
என். பானுமதி(முதல்வர்)
பயிலரங்கில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்
பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள
கண்ணனூர் இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(30.08.2013)
காலை 11 மணியளவில் தொடங்கியது.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்
வை.இரமேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் என்.பானுமதி
அவர்கள் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் தலைவர் திரு.ப.பெரியண்ணன் அவர்கள் தலைமையுரை யாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் திரு. அ. ஆண்டி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். இமயம் கல்லூரியின்
இயக்குநர் திரு. த. பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இமயம் பல்தொழில் நுட்பக் கல்லூரி
முதல்வர் இராசசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சு.மணிவண்ணன் அவர்கள்
தொகுப்புரை வழங்கினார். திருமதி இர.உமா சாரதா நன்றியுரை வழங்கினார்.
கல்லூரி மாணவிகள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள்
பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயிற்சி வழங்கினார். நாளையும்(31.08.2013)
தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.
த. பிரபு (கல்லூரி இயக்குநர்)
மு.இளங்கோவன் உரை
திங்கள், 11 மார்ச், 2013
உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது….
இணையப் பயிலரங்கில் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள், பார்வையாளர்கள்
கல்லூரிச் செயலரைச் சிறப்பிக்கும் காட்சி
கோவை
டாக்டர் என். ஜி. பி.
கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை பத்து மணிக்குத்
தொடங்கிய பயிலரங்கம் பகல் ஒரு மணிக்கு உணவு இடைவேளையின்பொருட்டு நிறைவுற்றது. உணவு
முடித்து மீண்டும் பயிலரங்கத்தின் செய்முறை விளக்கத்திற்கு மாணவர்கள் அரங்கில் காத்துள்ளனர்(இது
ஒரு சோதனைப் பதிவு)
சனி, 9 மார்ச், 2013
கோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
கோயம்புத்தூர்
காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் கற்றல்
கற்பித்தலில் கணினியின் பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற
உள்ளது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
நாள்:
11.03.2013 திங்கள்கிழமை
நேரம்:
காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை
இடம்:
கம்பர் அரங்கம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி,
என்.ஜி.பி
- காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர்-641 048
நிகழ்ச்சி நிரல்
தலைமை:
மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்
வரவேற்புரை:
பேராசிரியர் கி. மணிகண்டன் அவர்கள்
தொடக்கவுரை:
முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள்
வாழ்த்துரை:
முனைவர்
ஓ. டி. புவனேஷ்வரன் அவர்கள்
முனைவர்
வெ. இராமகிருஷ்ணன் அவர்கள்
முனைவர்
கி. துரைராஜ் அவர்கள்
பயிலரங்க
உரை: முனைவர் மு.இளங்கோவன்
நன்றியுரை:
பேராசிரியர் ப.ஆனந்தகுமார்
நாட்டுப்பண்:
தொடர்புக்கு:
பேராசிரியர் கி. மணிகண்டன் அவர்கள் (கோவை) 9976945565
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
திருப்பூர் பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் நிகழ்ச்சி நிரல்
திருப்பூர் பார்க்சு
கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம் 23.02.2013 காலை 10 மணிக்குத் தொடங்குகின்றது.
மாலை 5.மணிக்கு நிறைவடைகின்றது.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை: திரு.பெ.இரகுராஜன்
அவர்கள்
(செயலாளர், பார்க்சு
கல்லூரி, திருப்பூர்)
வரவேற்புரை: பேராசிரியர்
சாமி சுந்தரம் அவர்கள்
வாழ்த்துரை: பேராசிரியர்
ஜெ. திருமாறன் அவர்கள்
(முதல்வர், பார்க்சு
கல்லூரி, திருப்பூர்)
தொடக்கவுரை: திரு.
கே.பி.கே.செல்வராசு அவர்கள்
(தலைவர், முத்தமிழ்ச்
சங்கம், திருப்பூர்)
பயிலரங்க உரை:
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
சான்றிதழ் வழங்கல்:
நன்றியுரை:
நாட்டுப்பண்:
தொடர்புகளுக்கு:
முனைவர்
சாமி சுந்தரம், தமிழ்த்துறைத் தலைவர் - 9566656617
முனைவர்
பா. உமாராணி -9965148965
வியாழன், 7 பிப்ரவரி, 2013
திருக்குற்றாலச் செலவு...
பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்குதல்
திருக்குற்றாலம் இயற்கை
எழில்சூழ்ந்த ஊர். மலையும், மரங்களுமாக நிறைந்தது இந்த ஊர். இந்த ஊரில் பெருமையுடன்
விளங்கும் பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தவேண்டிய முன்
முயற்சியில் பேராசிரியர் சு. மகாலட்சுமி அவர்கள்
ஈடுபட்டார்கள். இணையத் தமிழ் என்று ஒரு தாள் பாடமாக முதுகலைத்
தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு அக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே
நேரில் வந்து இரண்டுநாள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கவேண்டும் என்று கல்லூரி
முதல்வர் சி. இராசேசுவரி அவர்கள் மின்னஞ்சலில் அழைத்தார்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்
பா. வேலம்மாள் அவர்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவேன். எனவே பயிலரங்கம் 02,03-
02.2013 (சனி, ஞாயிறு). இரண்டுநாள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.01.02.2013
இரவு விழுப்புரத்தில் பொதிகைத் தொடர்வண்டியில் ஏறி 02. 02. 2013 காலை தென்காசித்
தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன். முனைவர் பட்டாபிராமன் அவர்கள் (புளியங்குடி,
மனோக் கல்லூரிப் பேராசிரியர்) எனக்காகக் காத்திருந்தார். முனைவர் பட்டாபி அவர்கள்
தமிழ் இணையம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுவையில் நம்
இல்லத்துக்குப் பலமுறை வந்து ஆய்வுத்தொடர்பாகக் கலந்துரையாடியவர். நல்ல தொடர்பில்
இருப்பவர். அவரும் நானும் உந்துவண்டியில் குற்றாலம் கல்லூரியின் அருகில் இருந்த
விடுதிக்குச் சென்றோம். என்னை இறக்கிவிட்டு, கல்லூரிப் பணி நிமித்தம் அவர் உடன்
திரும்பிவிட்டார்.
நான் குளித்து, உண்டு முடித்துப்
பயிலரங்கிற்கு அணியமாக இருந்தேன். அவ்வமயம் நெல்லை இந்துக் கல்லூரிப் பள்ளியின்
தமிழாசிரியரும் என் நெருங்கிய நண்பருமான திரு. சிவசங்கரன் (களக்காடு ஊரினர்)
அவர்கள் வருகை தந்தார். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்து, உரையாடி மகிழ்ந்தோம்.
திருநெல்வேலி இருட்டுக்கடைத் தீங்களியை (அல்வாவைக்) கையுறைப் பொருளாகக் கொணர்ந்து
தம் அன்பை வெளிப்படுத்தினார். அப்பொழுது தமிழ்த்துறைத் தலைவர் உள்ளிட்ட பேராசிரியர்கள்
வந்து எங்களை விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.
பராசக்திக் கல்லூரியின்
நூலக அரங்கில் பயிலரங்கத் தொடக்கவிழா நடைபெற்றது. முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் வரவேற்கவும், முனைவர்
சி. இராசேசுவரி அவர்கள் தலைமையுரையாற்றவும், முனைவர் சு.மகாலட்சுமி அவர்கள்
நன்றியுரையாற்றவும், தொகுப்புரையை முனைவர் சோ.பாண்டிமாதேவி வழங்கவும் விழா இனிதே
தொடங்கியது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு உரிய அரங்கில் தமிழ் இணையம் குறித்த
அறிமுகம் காட்சி விளக்கத்துடன் நடைபெற்றது.
பயிலரங்கு நடைபெற்ற பொழுது
தென்காசியில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் வருகை தந்து
நிகழ்ச்சியைப் படம் பிடித்துத் திங்கள் கிழமை மாலை கற்க கசடற என்ற நிகழ்ச்சியில்
ஒளிபரப்பி ஊக்கப்படுத்தினார்.
ஒருநாள் முழுவதும் தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச்
செய்திகளும் காட்சி விளக்கத்துடன் மாணவியர்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாலை
ஐந்து மணி அளவில் அனைவரும் விடைபெற்றுக்கொண்டோம்.
விடுதியின் அறைக்குத்
திரும்பிய நான் ஒருகல் தொலைவில் உள்ள பேரருவியைப் பார்த்துவர நடந்து சென்றேன்.
திருக்குற்றாலக் குறவஞ்சியில் படித்த மலைவளம், வசந்தவல்லி பந்தடித்தல், குறத்தி குறிசொல்லுதல் உள்ளிட்ட பல இலக்கியக்
காட்சிகள் நினைவுத்திரையில் விரிந்தன. வானரங்களின் கூட்டம் கண்டும், இயற்கை
செயற்கையான நிலைகளையும் கண்டவனாய்ப் பேரருவி அடைந்தேன். ஐயப்பப் பக்தர்களும் சில
வெளியூர் மக்களுமாக அருவியில் நீராடி நின்றனர். மாற்றுடை இல்லாததால்
குளிக்கமுடியாமல் அங்கிருந்தவர்களிடம் காலையில் குளிக்க எத்தனை மணிக்கு வாய்ப்பாக
இருக்கும் என்று வினவி மீண்டேன். இரவு உண்டு முடித்து ஓய்வெடுத்தேன்.
காலை 5.30 மணிக்கு ஒலி
எழுப்பும்படி செல்பேசிக்குக் கட்டளை கொடுத்தேன். காலை 5.30 மணிக்கு எழுந்து
கடன்முடித்து, குளியலுக்கு ஆறுமணிக்கு அருவியில் நனைந்தேன். தண்ணென் அருவி நீரில்
தலைகாட்டினேன். காலைக்குளியல் குளர்ச்சியாக இருந்தது. ஓரிரு வெளியூர் மக்களும்
நீராடி மகிழ்ந்தனர். அரைமணிநேரம் நீராடி, மீண்டும் அறைக்கு வந்தேன்.
காலை பத்துமணிக்கு
மீண்டும் இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது. முனைவர்
பட்டாபிராமன் அவர்கள் காலை நிகழ்வில் வந்து இணைந்துகொண்டார். இருவரும் கணினிகளில்
தமிழ் மென்பொருள்களை உள்ளிட்டுத் தமிழ்த்தட்டச்சுப் பழக்கினோம். வலைப்பூ
உருவாக்கம் குறித்தும், படம் இணைத்தல் குறித்தும் விளக்கினோம். வேறு துறைகளைச்
சேர்ந்த பேராசிரியர்களும் நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டு, அடுத்த முறை வந்து
பேராசிரியர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நூலகக் கணினிகளில்
நச்சுகள் அதிகம் இருந்ததால் திட்டமிட்டபடி படங்களை மிகுதியாக இணையத்தில்
ஏற்றமுடியவில்லை. மாணவிகளின் பார்வைக்காகச் சில படங்களை உள்ளிட்டுக்காட்டினோம்.
பகலுணவுக்குப் பிறகு நண்பர் செல்வமுரளி அவர்கள் தம் சிங்கப்பூர் நண்பருடன் வருகை
தந்தார். முரளி அவர்களை இணையதளப் பாதுகாப்பு குறித்து உரையாற்றும்படி சொன்னோம்.
அவரும் சிறப்பாகச் செய்தார்.
முனைவர் பட்டாபி அவர்களும் இணையம், கணினி வழி வருவாய்
ஈட்டுவதற்குரிய வழிகளை எளிமையாகச் சொன்னதும் மாணவிகள் ஆர்வமுடன் அவர் உரையைச்
செவிமடுத்தனர். மீண்டும் நிறைவு விழாவில் சில மொழிகளைக் கூறி மாணவிகளை
உரையாற்றும்படி முதல்வர் அவர்கள் கூறினார்கள். மாணவிகள் ஆர்வமுடன் வந்து
இரண்டுநாள் பயிலரங்கின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுப்
புறப்பட்டேன்.
செல்வமுரளி உரை, முனைவர் பட்டாபி அவர்கள் பார்வையாளர் வரிசையில்
பயிலரங்கில் மாணவிகள்
பயிலரங்கில் மாணவிகள்
பங்கேற்பாளர் வரிசையில் கல்லூரி முதல்வர்
முனைவர் சு.மகாலட்சுமி நன்றியுரை
பயிலரங்கில் மாணவிகள், பேராசிரியர்கள்
பயிலரங்கில் மாணவிகள்
பயிலரங்கில் மாணவிகள்
தமிழூரில் வாழும்
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்க நினைத்தேன். நான் குற்றாலத்தில்
நிற்கும்பொழுது மாலை மணி ஐந்து. இரவு 7 மணிக்குத் தொடர்வண்டி. இரண்டு மணிநேரத்தில்
அறிஞர் ச.வே.சு.வின் இல்லம் சென்று பார்த்து,
உரையாடிவிட்டுத் தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தென்காசியைக்
கடந்து, கீழைப்பாவூர் கடந்து தமிழூரை நெருங்கினோம்.
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
குற்றாலம் பராசக்தி மகளிர்கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
திருநெல்வேலி
மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை
சார்பில் தமிழ் பயிலும் மாணவர்கள்
சற்றொப்ப நூறு பேருக்குத் தமிழ்
இணையப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் தமிழ் முதுகலை, எம்.பில், முனைவர்
பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள்
கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.
பயிற்சி
நாள்: 02.02.2013, மற்றும் 03.02.2013(சனி, ஞாயிறு இரண்டு
நாள்).
நேரம்:
காலை 10 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை நடைபெறும்.
தொடக்க
விழா 02.02.2013 காலை 10 மணி
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்த்தாய்
வாழ்த்து
தலைமை: முனைவர் சி.இராஜேஸ்வரி அவர்கள்
(முதல்வர், பராசக்தி மகளிர் கல்லூரி)
வரவேற்பு:
முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் (தமிழ்த்துறைத் தலைவர்)
வாழ்த்துரை:
திரு. எம். அன்புமணி அவர்கள் (கல்லூரிச் செயலர்)
பயிற்றுநர்
உரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர்
சு.மகாலட்சுமி அவர்கள்,தமிழ்த்துறை, பராசக்தி மகளிர் கல்லூரி
முனைவர்
கோ.பாண்டிமாதேவி அவர்கள், தமிழ்த்துறை,பராசக்திமகளிர் கல்லூரி
தமிழக
அரசு வழங்கியுள்ள மடிக்கணினியைப் பயன்படுத்தித் தமிழ் பயிலும் மாணவர்கள்
தமிழ்த்தட்டச்சு செய்வது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது,
வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுவது, தமிழ் மின்னிதழ்களுக்கு எழுதுவது,
தமிழ் ஆய்வுத்தளங்களின் அறிமுகம், சமூகவலைத்தளங்களில் எழுதுவது என்று அனைத்துநிலைப் பயிற்சியும்
வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் தமிழ் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள்
சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
புதன், 26 செப்டம்பர், 2012
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
சென்னை,
அடையாறில் அமைந்துள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப்
பயிலரங்கம் 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.
தொடக்க
விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல், முனைவர் க.திருவாசகம் அவர்கள்
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
குமாரராணி
மீனா முத்தையா கல்லூரியின் தாளாளர் முனைவர் மீனா முத்தையா அவர்கள் நிகழ்ச்சிக்குத்
தலைமையேற்க உள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும்,
கல்லூரி முதல்வர் முனைவர் பி.டி.விஜய்ஸ்ரீ அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.
பயிலரங்க
நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள்
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச்
சிறப்புரையாற்ற உள்ளார்.
பயிலரங்கம்
குறித்த ஆய்வறிக்கையைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சீ.சாந்தா அவர்கள்
வழங்குவார்.
முனைவர்
மு.இளங்கோவன்( பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி, புதுச்சேரி), முனைவர் ஆர்.கிருட்டிணமூர்த்தி
(கணினிப்பொறியியல் பேராசிரியர் (பணிநிறைவு), அண்ணா பல்கலைக்கழகம்)
ஆகியோர்
தமிழ் இணையம் பற்றியும் தமிழ் மென்பொருள்கள் பற்றியும் உரை நிகழ்த்துவர்.
தொடர்புக்கு
:
தமிழ்ப்பேராசிரியர்,
குமாரராணி
மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி,
4, கிரசென்ட் அவென்யூ சாலை, அடையாறு, சென்னை-
600 020
9962426445
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

சென்னை, அடையாற்றில் குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியாகிய டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியால் 1996 இல் இக்கல்லூரி சென்னையின் முதன்மைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் மரபு வழிப் பண்பாட்டினைக் கல்வியுடன் சேர்த்துக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு இகல்லூரி செயல்பட்டு வருகின்றது.
இக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 2012 செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியின் வரலாற்றையும், தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பதிவுகள், மின்னிதழ்கள், மின்னூல்கள், தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் தமிழ் இணையதளங்கள் குறித்துத் தமிழ்வழியில் வழங்கப்படும் விளக்கங்களை அறியலாம். துறைசார் வல்லுநர் பயிற்சியளிக்க உள்ளார்.
பதிவுக்கட்டணம்:
பேராசிரியர்கள் உருவா 200-00
ஆராய்ச்சி மாணவர்கள் உருவா 100-00
பதிவுக்கட்டணம் வரைவோலையாக
PRINCIPAL,
KUMARARANI MEENA MUTHIAH COLLEGE OF ARTS& SCIENCE,
GANDHI NAGAR, ADYAR, CHENNAI- 600 020
என்ற முகவரிக்குப் பதிவுப்படிவத்துடன் அனுப்பப்பெற வேண்டும்.
தொடர்புக்கு :
முனைவர் சீ.சாந்தா, சென்னை
9962426445

ஞாயிறு, 10 ஜூன், 2012
மதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்புற நடைபெற உள்ளது.
நாள் : 17.06.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-3
தஞ்சை வல்லம்- பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் - ஊரக வளர்ச்சி உயராய்வு மையமும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பகுத்தறிவாளர் கழகமும், இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்துகின்றன.
தமிழ் இணையப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற, குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுத்தறிவாளர் கழகம்சார்ந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
வா. நேரு, 9443571371
வே.செல்வம், 9843346346,
மீ.அழகர்சாமி, 9245289949
நாள் : 17.06.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-3
தஞ்சை வல்லம்- பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் - ஊரக வளர்ச்சி உயராய்வு மையமும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பகுத்தறிவாளர் கழகமும், இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்துகின்றன.
தமிழ் இணையப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற, குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுத்தறிவாளர் கழகம்சார்ந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
வா. நேரு, 9443571371
வே.செல்வம், 9843346346,
மீ.அழகர்சாமி, 9245289949
புதன், 14 டிசம்பர், 2011
திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது...
செவ்வாய், 13 டிசம்பர், 2011
மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…

பாத்திமா கல்லூரி முதல்வர் உரை
மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 13.12.2011 காலை 9 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி முதல்வர்,செயலாளர்,தமிழ்த்துறைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனைவர் மு.இளங்கோவன் மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்தார்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…
பயிலரங்கத்தின் காட்சிகள் சில…

கல்லூரிச் செயலர் உரை

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்
சனி, 10 டிசம்பர், 2011
மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

பாத்திமா கல்லூரி(தன்னாட்சி),மதுரை

அழைப்பிதழ்
மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
நாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை
இடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை

புதன், 7 டிசம்பர், 2011
திண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்கு
நாள்: 14.12.2011
இடம் : அமைதி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல்
நிகழ்ச்சி நிரல்
தொடக்க நிகழ்சி 10.00 – 10.45
வரவேற்புரை : திரு.தேவதயான்
முதல்வர் - அமைதி அறக்கட்டளை
தலைமை : திரு.ஜே.பால்பாஸ்கர்
தலைவர் அமைதி அறக்கட்டளை
சிறப்பு விருந்தினர் : முனைவர் மு.இளங்கோவன்
துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி
அறிமுகஉரை : திரு.சு.பாரதிதாசன்
செயலாளர், அருளகம்
முன்னிலை : திருமதி.மெர்சி பாஸ்கர்
முதல்வர் அமைதி தொழிற்பள்ளி
கருத்தாளர்
முனைவர் மு.இளங்கோவன்
முதல் அமர்வு 10.46-12.00
இரண்டாம் அமர்வு
12.01 – 01.00
மூன்றாம் அமர்வு
02.00 – 03.00
நான்காம் அமர்வு
03.01 – 03.45
கருத்துரை
3.46 – 04.00
பங்கேற்பாளர்கள்
தொடர்புக்கு: சு. பாரதிதாசன், 9843211772
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
ஊற்றங்கரை தமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்
பயிலரங்கத்தின் சில காட்சிகள்
ஊற்றங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். பள்ளியின் தாளாளார் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரு.பழ. பிரபு உள்ளிட்ட விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கலந்து கொண்டு இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம் செய்தார். உணவு உடைவேளைக்குப் பிறகு செய்முறைப் பயிற்சி தொடங்க உள்ளது.




ஊற்றங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். பள்ளியின் தாளாளார் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரு.பழ. பிரபு உள்ளிட்ட விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கலந்து கொண்டு இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம் செய்தார். உணவு உடைவேளைக்குப் பிறகு செய்முறைப் பயிற்சி தொடங்க உள்ளது.
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
ஊத்தங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்
கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் வித்யா மந்திர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. திரு. பழ.பிரபு அவர்களின் முயற்சியால் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. கல்லூரி,பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வதுடன் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயன்பாட்டை அறிய உள்ளனர்.
சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும், புதுவையிலிருந்து மு.இளங்கோவனும்,ஊத்தங்கரையிலிருந்து கவி செங்குட்டுவனும் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருள்,கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவோரை அன்புடன் வரவேற்க உள்ளனர். அனுமதி இலவசம். கணினி, இணைய ஆர்வலர்களை ஊத்தங்கரையில் சந்திக்க ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.
ஆர்வலர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : திரு.பழ.பிரபு + 91 9942166695
சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும், புதுவையிலிருந்து மு.இளங்கோவனும்,ஊத்தங்கரையிலிருந்து கவி செங்குட்டுவனும் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருள்,கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவோரை அன்புடன் வரவேற்க உள்ளனர். அனுமதி இலவசம். கணினி, இணைய ஆர்வலர்களை ஊத்தங்கரையில் சந்திக்க ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.
ஆர்வலர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : திரு.பழ.பிரபு + 91 9942166695
புதன், 10 ஆகஸ்ட், 2011
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்கம்
அழைப்பிதழ்
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.
நாள் :21.08.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,காட்டேரி, ஊற்றங்கரை
புதுச்சேரி முனைவர் .மு .இளங்கோவன், பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.
காலையில் தொடங்கும் விழாவிற்குப் பழ.பிரபு (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்) வரவேற்புரையாற்றுகின்றார்.
வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிறுவுநர் உயர்திரு .வே .சந்திரசேகரன் தலைமையில் விழா நடைபெறுகின்றது.
முன்னிலை : கே.சி.எழிலரசன், பழ.வெங்கடாசலம், தணிகை.ஜி.கருணாநிதி
அறிமுகவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
நன்றியுரை: அண்ணா.சரவணன்
பங்கேற்கும் பேராளர்களின் கவனத்திற்கு ...
*தமிழ் இணையம் ,தமிழ்த் தட்டச்சு,மின்அஞ்சல்,உரையாடல்,வலைப்பூ உருவாக்கம், பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிப்பீடியா,நூலகம் சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள், தமிழ்க் கல்விக்குரிய தளங்களை அனைவரும் அறிந்து கொள்ளவே ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இப் பயிலரங்கை ஏற்ப்பாடு செய்துள்ளது.
* பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதிவிற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443910444 /9865817165 /9942166695
பதிவு செய்ய கடைசி நாள் 18 /8 /11
* பயிலரங்கத்தில் பங்கேற்க ஊற்றங்கரை நகரத்தில் இருந்து காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .ஊற்றங்கரைC.A.K .பெற்றோலியம் பேங்க் அருகில் இருந்து காலை 9 மணி அளவில் ஒரு பேருந்தும் 9 .30 மணி அளவில் மற்றொரு பேருந்தும் புறப்படும்.
பயிலரங்கத்தில் பங்கேற்கும் அனைவர்க்கும் மதிய உணவு ,தேநீர் ,குறிப்பேடு ,எழுதுகோல் வழங்கப்படும் .
* பயிலரங்கத்தில் அனைவரும் காலை 9 .30 மணி முதல் மாலை 4 மணி வரை முழுமையாக பங்கு கொள்ள வேண்டும் .
ஞாயிறு, 12 ஜூன், 2011
புதுவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்
புதுச்சேரிப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(12.06.2011) காலை 10 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது. புதுவைப் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் படிப்பக அரங்கில் நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர்.
திங்கள், 18 ஏப்ரல், 2011
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்கம்

தாளாளர் இர.சண்முகநாதன்
தமிழகத்தில் இணைய அறிமுகத்துக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்டறிவு எனக்கு ஏற்படுவது உண்டு. பெரும்பாலும் வாய்ப்புகளை உருவாக்கவேண்டியிருக்கும். ஆனால் ஆண்டிமடம் பயிலரங்கிற்கான வாய்ப்பினை அக்கல்லூரியில் கணினித்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் இராசமோகன் அவர்கள் உருவாக்கினார். கல்லூரியின் தாளாளர் திரு.இர.சண்முகநாதன் அவர்களுக்கு என் இணையம் கற்போம் நூலினைக் கொடுத்து என்னை அறிமுகம் செய்துள்ளார்.
பேராசிரியர் இராசமோகன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல்வழியான நண்பர்தான். என் முயற்சிகளை அவ்வப்பொழுது இணையத்தில் கண்டு என்னைத் தாம் பணிபுரியும் கல்லூரிக்கு அழைக்க பல நாளாகத் திட்டமிட்டார். எனக்கும் வாய்ப்பான நாள் அமையாமல் இருந்தது. கோடைவிடுமுறையில் எப்படியும் என்னை அழைத்துவிடுவது என்று முடிவுசெய்தனர். நானும் ஞாயிற்றுக்கிழமை(17.04.2011) கலந்துகொள்கின்றேன் என்று உறுதியளித்தேன். அதன்படி வைகறை 4 மணிக்குப் புறப்பட்டுப் புதுச்சேரி-வடலூர்-நெய்வேலி-விருத்தாசலம் வழியாக ஆண்டிமடத்தை காலை 9.15 மணிக்கு அடைந்தேன். இடையில் விருத்தாசலத்தில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டேன்.
விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் பத்துமணிக்கு வந்துசேர்ந்தனர். அரங்கை நோட்டமிட்டேன். கல்லூரி வளர்ந்துவரும் நிறுவனம் என்பதால் கட்டடங்கள் புதியதாக எழுந்தவண்ணம் இருந்தது. அடுத்த ஆண்டுகளில் கல்லூரியில் அனைத்து வசதிகளும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றியது. எனினும் நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தாளாளர் அறிந்து உடன் கிடைக்கும்படி செய்தார்கள். அவரின் இணைய இணைப்புதான் கைகொடுத்தது. உருப்பெருக்கி மட்டும் வந்தது. திரைக்கு நான்கு முழ வேட்டியைச் சுவரில்பொருத்தித் திரை உருவாக்கினோம். மின்னாக்கியும் வந்து சேர்ந்தது.
மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம். எதிர்பார்த்தபடி மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர் வந்து குழுமினர். என் நண்பர் சுந்தரவடிவேல் அவர்களும் அங்கு வந்துசேர்ந்தார்.
கல்லூரியின் முதல்வர், நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள், தாளாளர் என அனைவரும் 10.30 மணியளவில் ஒன்றுசேர்ந்து நிகழ்ச்சியைத் தொடங்கினோம். தொடக்க விழா எளிமையாக நடந்தது. இணைய அறிமுகத்திற்கு முதன்மையளித்துப் பேச்சைக் குறைத்துக்கொண்டோம்.
தாளாளர் இர.சண்முகநாதன் அவர்கள் இளம் அகவையினர், கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிறுவனத்தைக் கவனிக்கத் தம் பணியை விட்டுவிட்டு முழுமையாகக் கல்லூரி வளர்ச்சியில் கவனம்செலுத்துகின்றார். மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும் என்பதில் துடிப்பு மிக்கவராக இருந்தார். என் நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தும் என் முயற்சியைப் பாராட்டியும் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.
நான் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சியை எடுத்துரைத்தேன், தமிழ்த்தட்டச்சு அறிமுகம் நடந்தது. மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழ் விசைப்பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூல்கம்,மின்னகரமுதலிகள்,இணையவழித் தமிழ்ப்பாடங்கள்,சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை எடுத்துரைத்தேன்.
மாணவர்கள் சிற்றூர்ப்புறம் சார்ந்தவர்கள் என்பதால் பொறுப்புடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். ஆர்வமுடன் கேட்டனர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 வரையில் என் உரை தொடர்ந்தது. அரைமணிநேரம் உணவு இடைவேளை. பிறகு இரண்டுமணிமுதல் நான்குமணிவரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன்.
நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர். பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயிலரங்க நிகழ்வை விவாதித்து, மீண்டும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று செல்பேசியில் பகிர்ந்துகொண்டனர். தமிழகத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடந்த பயிலரங்குகளுள் ஆண்டிமடம் சொளபாக்யா கல்லூரி நிகழ்வு குறிப்பிடத்தகுந்தது. இரவு பத்து மணிக்குப் புதுச்சேரி மீண்டேன்.

ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

கல்லூரியின் பேராசிரியர்கள், தாளாருடன் மு.இளங்கோவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)