பெருந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருந்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 டிசம்பர், 2013
பெருந்துறை மகாராசா கல்லூரி விழா
பெருந்துறை மகாராசா கல்லூரியில்
நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் மாணாக்கரின் ஆளுமை என்ற தலைப்பில் நடைபெற்ற முதல்
அரங்கில் கலந்துகொண்டு மு.இளங்கோவன் இன்று(20.12.2013) உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சு.இராசலெட்சுமி அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள்
திரளாகக் கலந்துகொண்டனர்.
வியாழன், 19 டிசம்பர், 2013
பெருந்துறை மகாராசா கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா, இணையம் கற்போம் கருத்தரங்கு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரி
மாணவர் மன்றத் தொடக்க விழாவும், இணையம் கற்போம் கருத்தரங்கும் 20.12.2013 வெளிக்கிழமை
காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் காலை
நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தோ. இரா. பெரியசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
கல்லூரியின் தாளாளர் திருவமை ப. தரணிதரன்
அவர்கள் தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர்
சு. இராசலெட்சுமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் மாணவர் மன்றத் தொடக்க விழாவில்
முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணாக்கரின் ஆளுமை என்ற தலைப்பில் முற்பகலிலும்,
இணையம் கற்போம் என்ற தலைப்பில் பிற்பகலிலும் உரையாற்ற உள்ளார்.
முனைவர் ந. இராசேந்திரன்
அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
சனி, 29 ஜனவரி, 2011
பெருந்துறை மகாராசா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா இருபாலர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(29.01.2011) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் சிறப்பு அலுவலர் பேராசிரியர் இரா.இந்திரலேகா அவர்களால் பயிலரங்கம் தொடங்கிவைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பா.பரமேசுவரி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ந.மகாலட்சுமி அவர்கள் விருந்தினரை அறிமுகப்படுத்தி இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு
பேராசிரியர்கள்,மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். 250 மாணவர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நூலகர் தருமராஜ் அவர்களும் பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவர்கள்(ஒரு பகுதியினர்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)