நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 டிசம்பர், 2010

உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு

சென்னையில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 16,17-12.2010 ஆகிய இருநாள்களில் நடைபெறுகின்றது.

சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் சொ.சகாதேவன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மாநாட்டு ஒருங்கிணைப் பாளருமான சு. ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

மாநாட்டு அறிக்கையினை ந.அரங்கராசன் வழங்க, மாநாட்டின் நோக்கங்களை முனைவர் இரா. இளவரசு எடுத்துரைத்து உரையாற்றுவார்.

முன்னைப் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பரமசிவம் அவர்கள் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிட்டுத் தொடக்கவுரையாற்றுகின்றார். பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புரையாற்றுகின்றார்.

மூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுறும். அதன் பிறகு அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்குவர்.

17.12.2010 மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்குநர் ப. மணி அவர்கள் அன்னை பெரி.கனரஞ்சிதம் நினைவு விருது வழங்கி நிறைவுரையாற்றுகின்றார்.

புதன், 10 டிசம்பர், 2008

சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு...

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பேற்று நடத்தும் எட்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு 13,14-12-2008 (காரி, ஞாயிறு) அன்று சென்னை லீ ராயல் மெரிடியன் உணவகத்தில் (கத்திப்பாரா அருகில்) நடைபெற உள்ளது. காரிக்கிழமை காலை தொடங்கும் மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்க உள்ளனர். 
 
 யான் அறிந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், மலேசியாவிலிருந்து பேராசிரியர் மன்னர்மன்னன், இலண்டனிலிருந்து திரு.சிவகுருநாத பிள்ளை கலந்துகொள்ள உள்ளனர். வெளிநாட்டுப் பேராளர்கள் மிகுதியானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். 
 
  யான் 14.12.2008 (ஞாயிறு) காலை 11முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ள அமர்வில் "ஆசிரியர்கள் மாணவர்கள் அறியவேண்டிய மின்னஞ்சல், வலைப்பதிவுகள்" என்னும் தலைப்பில் கட்டுரை படிக்க உள்ளேன். மாநாட்டு அரங்கில் இணைய இணைப்பு இருக்கும் என்பதால் தமிழ் இணையம் சார்ந்தவாறு என் உரையை அமைத்துக்கொள்வேன். 
 
 என் உரை இடம்பெறும் நேரத்தில் இணைய இணைப்பில் அன்பர்கள் இருப்பின் உரையாடலுக்கு அழைப்பேன். ஓய்வு கிடைத்தால் எங்களுடன் கலந்துகொண்டு உரையாடலாம். மாநாட்டு ஏற்பாடுகளைத் திரு.சு.ஈசுவரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.