நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
JAMAL MOHAMED COLLEGE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JAMAL MOHAMED COLLEGE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



  திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள சமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை 11.01.2017 (புதன் கிழமை) நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு அவர்கள் (இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்) கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். எழுத்தாளர் மாலன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்துத் தொடக்கவுரையாற்ற உள்ளார். சிங்கப்பூர்த் தமிழ்வள்ளல் திரு. எம்.எ. முஸ்தபா அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிட உள்ளார். தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார். கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மீ.அ.ச. ஹபிபூர் ரஹ்மான் வரவேற்புரையாற்றவும், கல்லூரிச் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

 கருத்தரங்கில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் தனித்தனி அமர்வுகளாக நடைபெற உள்ளன.

  மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பன்னாட்டுக் கருத்தரங்கின் மதிப்பீட்டு உரையைப் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் வழங்கவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் அவர்கள் நிறைவு விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். சமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சிராஜூதீன் நன்றியுரையாற்ற உள்ளார்.




ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் முதுகலை, மற்றும் உயராய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 22.09.2015 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கி, நடைபெறுகின்றது. தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம்- கல்வி வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்படுகின்றது.

பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது. பன்னாட்டுக் கருத்தரங்கில் மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான திரு. மன்னர் மன்னன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, தொடக்கவுரையாற்றுகின்றார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கின்றனர்.

மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பீ.மு.மன்சூர் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்க மதிப்பீட்டு உரை வழங்குகின்றார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ்வளர்ச்சியும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றுகின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் சிராஜூதின் 0091 9865721142




திங்கள், 6 ஜூலை, 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்






  22015 செப்டம்பர் மாதம் 22.09.2015 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதுகலைத் தமிழாய்வுத்துறை, சார்பில் நடைபெற உள்ளது.

தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம் - கல்வி – வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் இப் பன்னாட்டுக் கருத்தரங்கில். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

ஆய்வார்வம் கொண்டோர் கலந்துகொண்டு கட்டுரை படிக்க அனைவரையும் முதுகலைத் தமிழாய்வுத்துறையினர் அழைக்கின்றனர்.


  • ஆய்வுக்கட்டுரை ஏ 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • பாமினி எழுத்துருவில் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் கட்டுரையை அனுப்பலாம்
  • பேராளர் கட்டணம் உருவா: 750 – 00 (அயல்நாட்டினருக்கு 12 டாலர்)
  • ஆய்வாளர்கள் உருவா – 500 -00 (அயல்நாட்டினர் 8 டாலர்)
  • கட்டணம், கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 01.09.2015

பேராளர் கட்டணம் திருச்சிராப்பள்ளியில் மாற்றும் வகையில் வரைவோலையாக Head, Department of Tamil, Jamal Mohamad College, Trichirapalli என்ற பெயரில் அனுப்பலாம்.

தொடர்புக்கு:

முனைவர் க. சிராஜூதீன்,
துணைப்பேராசிரியர்,
முதுகலை - தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620  020

தொலைபேசி: 0091 98657 21142
Jmctins2015@gmail.com