நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நெய்வேலியில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் 17 ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு



  நெய்வேலியில் உள்ள பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள் கழகமும், உலகத் தமிழ்க்கழகமும் இணைந்து மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் 17 ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

   திரு. ந. இளம்பருதி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பாவாணரும் தமிழும் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்ற உள்ளார். இந்த அமைப்பின் தலைவரான திரு. த. த. நடராசு, செயலாளர் திரு. க. கென்னடி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் விழாவுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

நாள்: 11.02.2015 அறிவன் கிழமை
காலம்: மாலை 7 மணி
இடம்: பொறியியலாளர்கள் கழகக் கட்டடம், நகர்க்கூறு 17, நெய்வேலி நகரம்.