புலவர் இறைக்குருவனார் அவர்கள்
தனித்தமிழ்
அறிஞரும் மிகச்சிறந்த புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள்
பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது தஞ்சையில் இயற்கை
எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகனார் ஆவார்.
ஐயாவின் பணிகளுக்கு உதவியாக இருந்தவர். ஐயாவின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து தென்மொழி
வெளியீட்டிலும், ஐயாவின் பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.
முரசொலியில் பணிபுரிந்தவர். மக்கள் தொலைக்காட்சியில்
தமிழக ஊர்ப்பெயர்கள் குறித்து தொடர்ந்து உரையாற்றியவர். தமிழகத்தின் பல ஊர்களிலும்
நடைபெற்ற மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியவர்.
புலவர் இறைக்குருவனார் உரை