நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 ஜூலை, 2025

மலேசியத் தமிழ் அன்பர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா!

 

முனைவர் வி. முத்து மலேசிய அன்பர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டுதல்

 மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ள மலேசியத் தமிழ் அன்பர்கள் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன், கவிஞர் கே.எல்.நாராயணன்,  பேராசிரியர் சு. கந்தசாமி, திருமதி கிருட்டின வாணி நாராயணன் ஆகியோர்க்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா இன்று (15.07.2025) மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. 

 புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கி, மலேசியத் தமிழ் அன்பர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, வாழ்த்திப் பேசினார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலர் சீனு. மோகன்தாசு அனைவரையும் வரவேற்றார். 

 மு. அருள்செல்வம், தெ.தினகரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். முனைவர் மு. இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.  

 மலேசியக் கவிஞர் அருள் ஆறுமுகம் கண்ணன் மலேசியாவில் தமிழரும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். ப.திருநாவுக்கரசு நன்றியுரை வழங்கினார். 

 புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மா. சு. இராசா, மு. சுரேசுகுமார், அ. சிவேந்திரன், ர. ஆனந்தராசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



 

கருத்துகள் இல்லை: