நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 நவம்பர், 2012

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவருக்குப் பாராட்டு விழா


  
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கதிர் காமநாதன் அவர்களுக்குச் சென்னை பாரதியார் சங்கம் பாராட்டு விழாவை நடத்துகின்றது.

இடம்; பாரதீய வித்யாபவன் சிற்றரங்கு, மயிலாப்பூர், சென்னை.

நாள்; 29.11.2012, வியாழன் மாலை 6 மணி

வரவேற்பு: செந்தமிழ்த்தேனீ திரு. இரா.மதிவாணன் அவர்கள்

தலைமை : திரு இரா. காந்தி அவர்கள், முதுநிலை வழக்கறிஞர்

வாழ்த்துப்பா: திரு. நெல்லை இராமச்சந்திரன்

பாராட்டுரை:
மேஜர் து. இராஜா அவர்கள், மேனாள் துணைவேந்தர்
முனைவர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள்
முனைவர் உலகநாயகி பழனி அவர்கள்

ஏற்புரை: திரு.கதிர்காமநாதன் அவர்கள்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)


திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் மறைவு



புலவர் இறைக்குருவனார் அவர்கள்

தனித்தமிழ் அறிஞரும் மிகச்சிறந்த புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது தஞ்சையில் இயற்கை எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகனார் ஆவார். ஐயாவின் பணிகளுக்கு உதவியாக இருந்தவர். ஐயாவின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து தென்மொழி வெளியீட்டிலும், ஐயாவின் பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

 முரசொலியில் பணிபுரிந்தவர். மக்கள் தொலைக்காட்சியில் தமிழக ஊர்ப்பெயர்கள் குறித்து தொடர்ந்து உரையாற்றியவர். தமிழகத்தின் பல ஊர்களிலும் நடைபெற்ற மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியவர்.

புலவர் இறைக்குருவனார் அவர்கள் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கீவாமங்கலம் என்னும் ஊரில்  1942 இல் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றவர். இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டு செயல்பட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு உடையவர். தொல்காப்பிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்தின் மிகச்சிறந்த புலவர்கள் வரிசையில் இடம்பெறத்தக்க புலமைநலம் வாய்த்தவர். இவர்தம் வயிரமூக்குத்தி நூல் இவரின் தமிழ்ப்புலமைக்குக் கட்டியம் கூறும் நூலாகும்.

புலவர் இறைக்குருவனார் உரை