நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 15 டிசம்பர், 2012

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி தொடக்கவிழா…






பார்வையாளர்கள்

குவைத்தில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியின் தொடக்கவிழா இன்று(14.12.2012) காலை 10 மணியளவில் தொடங்கியது. கண்காட்சியைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் துணைத்தலைவர் இராமராஜன் அவர்கள் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்தன. 

பொறியாளர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். அறிமுகவுரையை இலட்சுமிநாராயணன் வழங்கினார். கண்காட்சியின் நினைவாக வெளியிடப்பட்ட நூல்களைச் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் வெளியிட்டார். குவைத் பொறியாளர்கள் பெற்றுக்கொண்டனர். சிறப்புவிருந்தினர் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்த இசையுரை வழங்கினார். பொறியாளர் இராமன் (தலைவர், பொங்குதமிழ் மன்றம்) நன்றியுரையாற்றினார்.

பிற்பகல் அமர்வில் குவைத் வாழும் தமிழ்க் குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, குவைத் வாழும் தமிழர்கள் வழங்கிய இலக்கிய உரை அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியில் தமிழர்களின் உணவு, இசைக்கருவிகள், தமிழறிஞர்களின் படங்கள், கைவினைப்பொருட்கள், மரப்பொருட்கள், உணவுப்பொருட்கள், விளையாட்டுக்காட்சிகள், விளையாட்டுப்பொருட்கள், தமிழ்நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குவைத் வாழும் தமிழர்கள் கண்காட்சியில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



கண்காட்சி மலர் வெளியீடு(பெறுதல் பொறிஞர் இராமராஜன்)

கண்காட்சியில் பொருள்கள் விற்பனை


கண்காட்சி மலர் வெளியீடு


கண்காட்சியைச் சுவைக்கும் தாய்க்குலத்தார்



                      மு.இளங்கோவன் சிறப்புரை


தாய்க்குலங்கள் ஆர்வமுடன் உரையாடும் காட்சி


அரபுநாட்டுக்காரர்களுக்கு நினைவுப்பரிசில்


பொறியாளர் இராமன்(நன்றியுரை)


சிறுவர் விளையாட்டு அரங்கில் கவண்வீசும் சிறுமி



இசைக்கருவிகள்


உழவுப்பொருட்கள் கண்காட்சி

3 கருத்துகள்:

மணிவானதி சொன்னது…

இதை தமிழர் விழா என்றுதான் அழைக்கவேண்டும். மிக அருமை.பொங்கள்விழா நாம் கொண்டாடுவதுபோல அங்கு தமிழர்விழா.
பாராட்டுக்கள் பேராசிரியரே.

முனைவர். வா.நேரு சொன்னது…

எங்கு சென்றாலும் அதனைப் பற்றிய அருமையான பதிவினை இணையத்தில் பதிந்திடும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களே ! வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள். தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும் ....

முனைவர். வா.நேரு சொன்னது…

எங்கு சென்றாலும் அதனைப் பற்றிய அருமையான பதிவினை இணையத்தில் பதிந்திடும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களே ! வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள். தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும் .